பக்கம்:காதலர் கண்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கர்தலர் கண்கள் (அங்கம்-1 மதா. நீங்க வாணும்ன, நான் கண்ணுலம் பண்ணிக்கிறேனே. ஜெ. நீயா ?-எனக்குச் சிரிப்பு வருகிறது, இந்த முழு முண்டத்தை கட்டிக்கொண்டு அழுகிறது ! (நகைக்கிருன்.) குடி வெறியால் தள்ளாடிக்கொண்டு ஜுல்பிகர்கான் வருகிருன். ஜூ. (மதால் சிங்கைச் சுட்டி) ஜெயசிங் ஷா இன்ஷா உத்தரவு பண்ணு, நம்பொ உடனே புறப்பட்ராங்கோ. இண்ணக்கி சாய்ங் கால் பொறப்பட்ராங்கோ, உன்கு ஷாதிபண்ணுே. உடனே பொறப்பட், கபர்தார் ! (போகிருன்.) செ. சரிதான், ராஜாவுக்குத் தகுந்த சேனதிபதி அவன்தான் அந் தத் தப்பு செய்தா னென்ருல், இவனுக்குங் கூட கண் தெரிய வில்லை. ஜெ. அப்படியல்ல, இவனுக்கு என்ன நன்ருய்த் தெரியாது. இவன் என்னை அதிகமாய்ப் பார்த்ததில்லை-செயிட்சிங் எனக் கொரு யுக்தி தோன்றுகிறது. நம்முடைய மதாலுக்கு என்னுடைய உடை முதலியன வெல்லாம் தரித்து, ஆஜ்மீருக்கு உங்களுடன் அனுப்புகிறேன். ஜுல்பிகர்ருக்கு இந்த மர்மங் தெரியாது. இவன் ஜெயசிங் என்று எண்ணி யிருக்கிருன் கீ மாத்திரம் உண் மையை வெளியிடாமலிருப்பையானுல் நமது காரியங் கைகூடும். விவாகமானபின் மாற்ற ஒருவராலு மாகாது. அஜ்மீர் அரசன் மகள் கேவலம் ஒரு நவகரை மணம் புரியும்படி செய்வித்தால், அவள் குடும்பத்தார் எங்கள் குடும்பத்தாரை வருத்தினதிற் கெல் லாம் சிrையு மாகும். செ. நல்ல யுக்தி தான்-பிறகு உண்மை எப்படியும் வெளியாகுமே, அப்பொழுது என்ன செய்கிறது ? ஜெ. இதைவிட என்ன கெட்டுப்போகப்போகிறது : இப்பொழுது ஆகிறது, அப்பொழுது ஆகட்டும். மதால், நீ யென்ன சொல்லு கிருய் உன்பாடு அதிர்ஷ்டங்தான். அஜ்மீர் அரசன் மகளே உனக் குப் பெண்ஜாதி யானல், உனக்கென்ன குறை ? என்னைப்போல் வேஷம் போட்டுக் கொண்டு போகிருயா ! மதா ஆஹா அப்படியே செய்ரேன்-அப்பா ! இப்போதான் அந்த ஜோஸ்யன் சொன்னது கெஜமாகுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/10&oldid=787264" இலிருந்து மீள்விக்கப்பட்டது