பக்கம்:காதலர் கண்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா.சி.11 காதலர் கண்கள் デ ஜெ. அதென்ன, ஜோசியன் சொன்னது ? மதா இல்லெ, நானு சின்னப்பொ ஒரு ஜோசியன்கிட்ட போயி நானு ஒரு ராஜா பொண்ணெ கண்ணுலம் பண்ணிக்குவன இண்ணு கேட்டேன். அப்படியே ஆவும்னு ஜோஸ்யம் சொன்னன். அது முதலு நானு சமயம் பார்த்துக்குனே இர்ந்தேன், இப்போதான் அந்த சமயம் வந்தது. ஆனல் ஒரு சமாசாரம். ஜெ. என்ன ? மதா. நானு தனியா, ஒண்டியா, அஜ்மீருக்குப் போவமாட்டேன். நீங் களும், கூடவந்தாத்தான் நான் போவேன். ஜெ. நான் கூட வருவதாவது ? மதா. ஒரு வேளெ கண்ணுலம் ஆவுரத்துக்குள்ளே யாராவது என்னெ கண்டு புடிச்சுட்டா, நான் என்ன செய்யரது ? கண்ணுலம் ஆய்பூட்டா பரவாயில்லே. அதுவரைக்கும் கஷ்டமாச்சே. அது வரைக்கும் நீங்க எம் பக்கத்திலேயே யிருக்கொணும். ஜெ. இ.தென்ன ஒரு சங்கடம் ! நான் உன்னுடன் வருவதாவது ! நீ யென்னைப்போல் வேஷம் போட்டுக்கொண்டு போகப் போகிருய், நான் எப்படி உன்னுடன் போவது ?-ஆயினும் ஒரு யோசனை. அங்கே அஜ்மீரில் ஒருவரும் என்னைப் பார்த்த தில்லை. நான் உன்னுடைய நவ்கர்-வேலையாளப் போல் வேஷம் போட்டுக் கொண்டு உன்னுடன் வருகிறேன். நானும் அஜ்மீரைப் பார்த்த தில்லை-செயிட்சிங், என்ன சொல்கிருய் ! செ. சரி, அப்படியே. மதா. அதெல்லாம் சரிதான்-ஒரு சந்தேகம் மாத்திரம். ஜெ. என்ன இன்னும் ! - மதா. இல்லெ, அந்த ராஜகுமாரத்தி அழகா யிருப்பானாஜெ. சத் வாயை மூடு. கெட்ட கேட்டிற்குப் பிச்சைக் குடுவை யிரண்டாம் ராஜகுமாரி கிடைக்கிறது போதாதோ ? அழகா யும் இருக்க வேண்டுமா ? வா போவோம் நமது வீட்டிற்கு. மதா. இல்லெ, சும்மா கேட்டேன். (எல்லோரும் போகிருர்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/11&oldid=787266" இலிருந்து மீள்விக்கப்பட்டது