பக்கம்:காதலர் கண்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலர் கண்கள் (அங்கம்-1 இரண்டாவது காட்சி இடம்-அஜ்மீர் அரண்மனையைச் சேர்ந்த தோட்டம், காலம்-காலே. தா. புஷ்பக்கூடை ஒன்றை வைத்துக்கொண்டு தாராபாய் வருகிருள். இவ் வழகிய ரோஜர்ச் செடி என்ன ரமணியமாய்ப் புஷ்பித் திருக் கிறது! இதைப் பார்க்கும்போது என் நினைவு எனக்கு வருகிறது. புஷ்பித்த இவ் வழகிய செடி, அதன் புஷ்பத்தின் அழகையும் மேனியையும் மணத்தையும் அறிந்து, அனுபவிக்க வல்ல அறி ஞன் கையில் அடைந்தால், அவன் கரத்திலும் சிரத்திலும் அதிக சுகத்தையும் மேன்மையும் எப்படி அடையுமோ, அப் படியே நானும் என் கருத்திற் கினிய, என்மீது உண்மையிற் காதல்கொண்ட கணவனைப் பெறுவேனுயின், கவலை யற்றுச் சுக மாய் வாழ்நாட்களைக் கழிப்பேன்! அஃதன்றி இவ்வழகிய ரோஜா அதன் மகிமையையறியாத மெளட்டிகன் கையை யடைந்தால் எப்படி கசக்கப்பட்டழியுமோ, அவ்வாறே காதலில்லாக் கண வனக் கைப்பிடிக்கும்படி நேரிட்டால், கருத் தழிந்துமாள்வேன்! என்னழகிய ரோஜாவே ! உன்னே நான் சிரசாக வகிப்பது போல எனக்கு நேருங்கணவன் என்னைச் சிரசாக வகிப்பானுக ! (ரோஜா புஷ்பத்தைத் தலையில் அணிந்துகொள்கிருள்.) எனது கருத்தினுக் கிசைந்த காதலன் எக் கணம் என் கண் னெதிர்ப்படப்போகிருனே ? - பார்ப்போம். - சீக்கிரம் என் மனுேரதம் நிறைவேறுமென்று எனக்குள் ஏதோ ஒன்று சொல்லு கிறது. யார் அங்கே ! துளசிபாய் வருகிருள். நான் தான். நீயா ? யாரோ வென்று பார்த்தேன். யாரென்று பார்த்தாய் ! ஒரு வேளை மதனசிங்தான் இங்கு வந் தாரென்று நினைத்தையோ ? துளசி உனக் கெத்தனை முறை சொல்வது, அந்த ராஜகுமா ரன் பெயரையும் என்முன் கூறவேண்டா மென்று : சொல்ல வில்லை யம்மா. உனக்குக் கோபம் வேண்டாம், மறு படியும் சொல்வதில்லே மதனசிங் பேரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/12&oldid=787270" இலிருந்து மீள்விக்கப்பட்டது