பக்கம்:காதலர் கண்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0 தா. தா. தா. தா. தா. காதலர் கண்கள் |அங்கம்-1 இல்லை, இல்லை. சொல். அவர் இந்த நாட்டைத் திரும்பிப் பாராதிருக்க வேண்டு மென்ருல், அவரை நீ மணஞ் செய்து கொண்டு, குர்ஜர தேசம் போய்ச் சேர். மறுபடியும் இந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கிருரா பார். துளசிபாய், இன்னும் இந்தப் பிடிவாதமா ? நான் மகாராஜா விடம் போய்ச் சொல்லுகிறேன். (திரும்புகிருள்.) (தடுத்து) தாராபாய் ! தாராபாய் இது நியாயமா ? நீயே யோசித்துப்பார். நானுக எதாவது எடுத்துக் கூறினேன ே கேட்டதற்குப் பதில் கூறினேன். அப்பொழுதே யென் மீது கோபங் கொள்ளக்கூடாதென்று கேட்டேன, இல்லையா ? போனது போகட்டும். இனி அந்த வார்த்தை யெடுப்பதில்லை உட்கார். வேறு ஏதாவது பேசுவோம்-தாராபாய், எனக்கொரு சந்தேகம். இத்தனை ராஜகுமாரர்கள் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று வந்து கேட்கிருர்களே. என் னைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஏன் ஒரு வரும்-வருவதில்லை ? இந்த மாதிரி வா யிருப்பதனுல்தான்.-அதிருக்கட்டும், நமது மந்திரி தேசாந்திரம் போனவர் ஆங்காங்கு தான் பார்க்கும் ராஜ குமாரர்களின் படங்களை யெல்லாம் அனுப்புகிறேன் என்ருரே, ஏதாவது வந்து சேர்ந்ததா தெரியுமா உனக்கு ? ஒன்றுதான் இதுவரையில் அனுப்பி யிருக்கிறர். ஆனல் தான் பார்த்ததிற்குள்ளாக அதுதான் நிரம்பவும் அழகுள்ள தென்றும், அதைவிட மேலானது கிடைப்பது கஷ்டமென்றும் சொல்லி யனுப்பியிருக்கிருர். எங்கே அந்தப் படம் யாருடைய படம் அது ? அது யாருடைய படமோ நன்ருய்த் தெரியவில்லை. நான் எப் படிச் சொல்வது ! நான் அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் அத னுடைய அழகு என் கண்களைக் கூசச் செய்கிறது. அப் படத் தைப் பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். அப்பா அவ்வள வழகிய அரச குமாரன் யார் ? அந்தப் படம் எங்கே ! நான் பார்க்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/14&oldid=787274" இலிருந்து மீள்விக்கப்பட்டது