பக்கம்:காதலர் கண்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3; காதலர் கண்கள் fy 酶。 சே, தா,

தா. உங்களுக் கென்ன நகைப்பா யிருக்கிறதோ ? (திருமுகம் ஒன்றுடன் ஒரு சேவகன் வருகிருன்.) ராஜாதிராஜனே, ஷா இன்ஷா மகம்மதுஷாவிட மிருந்து ஒரு சவார் இந்த நிருபத்தைக் கொண்டுவந்தான். (கடிதத்தைக் கொடுக்கிருன்.) என்ன அவ்வளவு அவசரமான காகிதம் ஷா இன்ஷாவிட மிருந்தா ? சரி, நீ போ, (சேவகன் போகிருன், கடிதத்தை வாசித்து கழுவ விட்டு அங்கிருந்த ஒர் ஆசனத்தின் மீது சாய்ந்து விடுகிருன்..! அப்பா ! அப்பா ! என்ன சமாசாரம் ? என்ன ? என்ன ! என்ன மகாராஜா ! ராஜ்யமுங் குன்றி, தேகபலமுங் குன்றி யிருக்கின்றேன் ! நா னென்ன செய்யப் போகிறேன் :-ஈசனே ஜகதீசனே ! இதுவோ என் கதி ! . 'வருந்துகிறன்.) அப்பா, அப்பா நீர் கண்ணிர் சொரியக் காதகி நான் கண்டு எப் படிச் சகிப்பேன் ! அப்பா, சமாசாரம் இன்ன தென்று கூறுமே, எனக் கொன்றுந் தோற்றவில்லையே. பேதை, பெண்பால் நான் என்ன செய்வேன் ! கண்மணி, நீ எல்லாப் பாஷையும் நன்ருய்ப் படித்திருக்கிருய், அந்த மகம்மதியனிடமிருந்து வந்திருக்கிற லிகிதத்தைப் பார். (காகிதத்தை எடுத்துப் படித்துவிட்டு அப்பா, இதென்ன அகி யாயம் சக்ரவர்த்தியாயிருந்தால் எந்தக் கொடுமையையும் செய்ய லாமோ ? இந்த அதிகாரம் இவனுக்கு யார் கொடுத்தது : . (கடிதத்தைப் படித்துவிட்டு.1 கண்மணி அந்தக் கொடிய அவுரங்கஜீப் காலத்தில் அப் பாத கன் ஏற்படுத்திய வழக்கம் இது. ராஜகுமாரிகளை யெல்லாக் தனக் கிஷ்டமான ராஜகுமாரர்களுக்கு மணஞ் செய்துகொடுக்கும்படி பலவந்தித்து வந்தான். அவனுக்குப் பிற்காலம் வந்த சக்ரவர்த் திகள் அக் கொடிய வழக்கத்தைப் பெரும்பாலும் விட்டனர். இம் மடையன் இப்போது மறுபடியும் அப் பாழும் வழக்கத்தை ஆரம்பித் திருக்கிருன், ஐயோ! இருபது வருஷங்களுக்கு முன் 3 z I.- - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/21&oldid=787292" இலிருந்து மீள்விக்கப்பட்டது