பக்கம்:காதலர் கண்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) காதலர் கண்கள் g? ஜூ. உடைசிங், அச்சா தீர்மான் ? நம்போ போரான். கிம்பள் தேவடிமே அச்சா ஷராப் இர்க்ரா சொல்ராங்க, அத்கே கம்பள் கொஞ்சம் மாத்ரி பாக்கரா , கியா போல்தா ? •. ஆளுல் வாரும் போவோம். இருவரும் போகிருர்கள்.) நான்காவது காட்சி இடம்-அரண்மனைத் தோட்டத்தில் ஓர் வெளி. காலம்-காலே தோழியைப்போல் உடை தரித்த தாராபாயும், ராஜ குமாரியைப்போல் வேடம்பூண்ட துளசிபாயும் வருகிருர்கள். தா. துளசிபாய், நான் இதுவரையில் சொன்னதெல்லாம் கன்ருய் ஞாபக மிருக்கட்டும், நீ மிகவும் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ளவேண்டும். அவர்கள் முன்னிலையில் உன்னையின்னவ ளென்று யாராவது அறிந்து கொண்டார்களோ, தீர்ந்தது என் கதி நீயும் ராஜகுமாரர்களில் ஒருவனை மணம்புரிய முடியாது. தெரியுமா ? . . . து. தெரியும், தெரியும் தாராபாய். - தா. சரி, சரி ; இனிமேல் என்னத் தாராபாய் என்று கூப்பிடாதே. அவர்களெல்லாம் வரும் சமய மாயிற்று. இனி யென்னத் துளசிபாயென்றே அழை. கான் உன்னைத் தாராபாயென்றே அழைப்பேன். - து. சரிதான், அப்படியே ஆகட்டும் தாராபாய். தா. பார்த்தையா சொல்லிக்கொண்டே யிருக்கிறேன், இதற்குள் மறந்துவிட்டனேயே. என்னைத் துளசிபாயென்றே அழை. து. ஒரு சந்தேகம்.--தாரா-உம்-துளசிபாய், நான் ராஜகுமார னேக் கலியாணஞ் செய்துகொண்ட பிறகு நான் அவரை ‘என்னவென் றழைப்பது ? . தா. ஐயோ, சுவாமி ! இதற்குள் அதற் கென்ன அவசரம் : கலி யாணந்தா னுகட்டுமே. பிறகு அதெல்லாம் சொல்லிக் கொடுக் கிறேன். து. கொஞ்சம் இப்பொழுதுதான் சொல்லேன். தா. பிராணநாதா என் றழைக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/31&oldid=787313" இலிருந்து மீள்விக்கப்பட்டது