பக்கம்:காதலர் கண்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தா. காதலர் கண்கள் (அங்கம்-1 யிருந்தும் சரத்காலத்துச் சந்திரனைப்போல் பிரகாசித்தது : உத்தம கூத்திரிய குலத்தி லுதித்த காளிகைபோல் என் கண் ணுக்குக் காணப்பட்டாள். சீ! இவள் ராஜகுமாரியாய்ப் பிறந் திருக்க வேண்டும்.-இதென்ன விந்தை இவளேக் கண்டு அரை நாழிகை யிராது, ஒரு வார்த்தையும் இவளுடன் பேசி னவ னன்று, இவள் ஊர் அறியேன், உற்ற பேர் அறியேன், குலம் அறியேன், கோத்திரம் அறியேன் : இருந்தும் இம் மடந்தையையே நாடுகின்றதே யென் மனம் ! அஜ்மீர் அரசன் மகளைக் கண்ணெடுத்துக் காண்பதே எனக்கு மானக் கேடென் றெண்ணி வந்த நான், அவள் தோழியின் மீது காதல் கொண்டேன்! யார் விதி யாரை விட்டது ? நான் நகருக்குத் திரும்புமுன் எப்படியாவது அவளைக் கண்டு, அவளுடன் வார்த்தையாடி, அவளது காதலைப் பெற வேண் டும் நான். இந்தச் சவுக்கம் கிடைத்தது எனக்கு நலமாயிற்று. இதைக் காரணமாகக் கொண்டு, அவளுடன் பேசி, அவள் விருத்தாந்தத்தை யெல்லாம் விசாரித் தறியவேண்டும். நான் காலதாமதஞ் செய்ய லாகாது. (ஒரு புறமாய்ப் போகிருன்.) மற்ருெரு புறமாகத் தாராபாய் loறுபடியும் வருகிருள். ஆஹா ஆருலகில் மிகுந்த ஆச்சரியகரமானது எது என்று கேட்டதற்கு அந்தத் தர்மராஜன் கூறிய விடை யெனக்கு அமைந்ததா யிருக்கவில்லை. இவ் வீரேழ் புவனங்களிலும் இதைப் பார்க்கிலும் ஆச்சரியகரமானது இல்லை யென்று கூறு வதற்கு இக் காதலையே உதாரணமாகச் சொல்ல வேண்டும். ஆயினும் இக்காதல் இன்னதென்று, இதன் நிஜ ஸ்வரூபத்தை அறிந்தவர் ஒருவரு மில்லையே எவ் வுலகிலும் அதன் வலைக் குட்பட்டா லொழிய அது இன்னதென் றறிவது அதனிலும் அசாத்தியம் ! நான் இதை யென்னென் றுரைப்பது 1-இன்று. காலவரை இவர் முகத்தை நான் பார்த்தறியேன். இவர் இன் ெைரன்றுங் கேட்டதில்லை. இந்த rணம்வரை யிவருடன் வாய் திறந்தொரு வார்த்தையாடி அறியேன். இவர் குலம் அறியேன், கோத்திரம் அறியேன். இவரைப் பற்றி யொன் றுமே அறியேன். நான் அஜ்மீர் அரசனது அரும் புதல்வி, அவரோ ஜெயபுரி அரசனது வேலையாளாய் வந்த வீரன், எங் கள் குலத்து ஜன்மத் துவே.வியைச் சார்ந்தவர். இன்று காலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/44&oldid=787444" இலிருந்து மீள்விக்கப்பட்டது