பக்கம்:காதலர் கண்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 க ச த ல ர் க ண் கள் (அங்கம்-1 தா. நான்-இரு பொருள் படக் கூறினேன். மதன. அதோ ராஜகுமாரி வந்திருக்கிரு: நான் என்ன பேசறதிண்ணு சொல்லிக் கொடுக்கலியே, ஜெ. (மதால்சிங்குடன்) பொறு, பொறு : அவசரப்படாதே. (உரத்து) ஆத்திரப் படலாமோ அந்தோ அந்தோ சற்றே காத்திருந்தா லென்ன காதலது குன்றிடுமோ” து. துளசிபாய், நீ சொல்வது எனக்கு ஒன்றும் அர்த்தமாக வில்லையே. அந்தச் சவுக்கமாவது கிடைத்ததா? தேடு வோம் வா, - தா. (துளசிபாயுடன் இப்பொழுது இருட்டி விட்டது. இனியெங்கு தேடுவது? (உரத்து) நாளைத்தினங் காலை நாமிங்கு வருவோமா? மதா. காம்போ சாப்டப் போலாமா அரமனைக்கி: ஜெ. (மதால்சிங்குடன்) ஆம்; ஆம் பசிக்கின்றதெனக்கும். (உரத்து) அப்படியே செய்வோம்; அதற்கென்ன சந்தேகம் ? து. நேரமாகிறது. புறப்படு உடனே. - தா. (துளசிபாயுடன் இதோ, உத்திரவுபடி. (உரத்து மறவாதீர் என்றனையே மண்ணின்மே லுள்ளவரை துறவாதீர் என்றனேயே தூயமன துடையிரேல்' மதா. வாரும், வாரும் ; நேர மாகிறது. ஜெ. மறப்பேனே வுன்றனயே மண்ணிலெந்த ஜன்மத்தும் துறப்பேனே வுன்றனயான் தூய்மொழியே துன்புறேல் ' மதா. ஜெயசிங்குடன்) என்ன பாடிக்கொண் டிருக்கிறீர்? து. (தாராபாயுடன் வா போவோம். (ஜெயசிங்கை ஒருபுறம்-மதால்சிங்கும், தாராபாயை மற்ருெரு புறம் துளசிபாயும் இழுத்துக்கொண்டு போகின்றனர்.) ஐந்தாவது காட்சி இடம்-அரண்மனைத் தோட்டம். காலம்-முன்னிரவு. தாராபாய் ஒரு பூச்செண்டு கட்டியவண்ண மிருக்கிருள். தா. இவ்வளவழகாக நான் என்றுங் கட்டியதில்லை. காதலானது - எனது புத்தியையும் யுக்தியையும் கூர்மையாக்குகின்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/48&oldid=787451" இலிருந்து மீள்விக்கப்பட்டது