பக்கம்:காதலர் கண்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதலர் கண்கள்
முதல் அங்கம்
முதற் காட்சி

இடம்-பூங்தோட்டத்தில் பளிங்குக்கல் மண்டபம். காலம்-கடுப்பகல், மத்தியில் சயனத்தில் மஹம்மதுஷா ஹுக்கா பிடித்தவண்ணம் சயனித் திருக்க, சுற்றிலும் ஜுல்பிகர்கான், தாதேதான் முதலிய மகம்மதி யத் தலைவர்கள் மதுபானம் செய்துகொண்டும், ஹுக்கா பிடித்துக் கொண்டும், உட்கார்ந்திருக்கின்றனர். விலைமாதர் ஆடிக் கொண் டிருக்கின்றனர். செயிட்சிங் ஒரு நிருபத்துடன், பாதுஷாஅருகில் வருகிறன்.

செ. ஷா இன்ஷா !-ஷா இன்ஷா !-ஷா இன்ஷா ! ம.(தலையை மெல்லத் திருப்புகிருன்.)
செ. ஜெயசிங்கிடமிருந்து அவசரமான லிகிதம் வந்திருக்கிறது.
ம.அச்சா ! - X- (தலையைத் திருப்பிக்கொண்டு ஹுக்கா பிடிக்கிருன்.)
செ.என்னடா இது?-ஷா இன்ஷா ! இது அவசரமான கடிதம்.
ம. கியா ?
செ.ஜெயசிங்கிடமிருந்து வந்திருக்கிறது.
ம.கோன் ஜெயசிங் ?
செ.சர்க்கார் ரஜபுத்ர சேனதிபதி.
ம.அச்சா ! - (மறுபடியும் தலையை திருப்பிக் கொள்ளுகிருன்.)
செ.ஜெயசிங்கிட மிருந்து அவசரமாய் ஒரு சவார் கொண்டு வந்திருக் கிருன்-படிப்பதா ?
ம.நம்பள்கி படிக்கருன், என்னத்கு?
செ. தங்களுக்கு மேல் விலாசம்.
ம.ஹோ அச்சா! மேல்விலாசம்கி சரி யிர்க்கருன் !
செ.ஆமாம், ஷா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/5&oldid=1064587" இலிருந்து மீள்விக்கப்பட்டது