பக்கம்:காதலர் கண்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.5) க த ல் ர் க ண் க ள் 4? வந்திருக்கிறேன்," என்று கேள் மெதுவாய். அவர் எனக் குப் பசிக்கவில்லை' என்று சொன்னபோதிலும், "அடியாள் மீது தயவுசெய்து கொஞ்சம் புசிக்கவேண்டும்,' என்று வற்புறுத்திக் கேட்க வேண்டும், பிறகு ஏதாவது ஒன்றை எடுத்துக் கொஞ்சம் மெல்லெனக் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். து. அவ்வளவுதான ? நான் சாப்பிடவேண்டாமா ? தா. ஐயையோ! கூடவே கூடாது. அவர் புசித்தானவுடன் அவ ராக ஏதாவது கொஞ்சம் கையிலெடுத்து உன்னை வேண்டிக் கொடுத்தால், வேண்டாமென்று மறுத்து, பிறகு பலாத்காரஞ் செய்தால் கொஞ்சம் புசிக்கவேண்டும். 4. து. ஐயையோ இதென்ன கஷ்டமா யிருக்கின்றது ஒருவேளை முன்னதாகவே அவர் எல்லாவற்றையும் புசித்துவிட்டால் ? தா. அப்படி செய்யமாட்டார், கொஞ்சந்தான் சாப்பிடுவார். து. எனக்கென்னவோ சந்தேகமாயிருக்கிறது ; பார்க்கிறேன். நேரமாகிறது, போவோம் அரண்மனைக்கு. தா, நீ போ முன்பு, நான் அப்புறம் வருகிறேன். - (தாராபாயும் துளசிபாயும் ஒருபுறமாகப் போகிருர்கள்.1 மற்ருெரு புறமாக ஜெயசிங்கும், மதால் சிங்கும் வருகிறர்கள். ஜெ. -அவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.--நான் சொல்லிய தெல்லாம் ஞாபக மிருக்கின்றதா ? கொஞ்சமா வது தவறி நடந்தாயோ போயிற்றெல்லாம் அடியோடு. பிறகு ராஜகுமாரி ராஜகுமாரிதான் ! நீ தோன் ! (மதால்சிங் விரல்களை எண்ணிக்கொண்டிருப்பது கண்டு) நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன், நீ யென்ன எண்ணிக் கொண்டிருக்கின்ருய் விரலை ? மதா. இல்லெ, இல்லெ, கண்ணுலத்துக்கு இன்னம் எத்தனி நாளி ருக்குதிண்ணு பார்த்தேன் ஆறு நாளிருக்குது. ஜெ. இந்தப் பயித்தியத்திற் கென்ன செய்வது ! நான் சொல் வதைக் கவனிக்காமற்போனல் பிறகு உண்மை எப்படியும் வெளியாகிவிடும் பிறகு ராஜகுமாரியைக் கலியாணஞ்செய்து கொள்வதெல்லாங் கனவுதான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/51&oldid=787461" இலிருந்து மீள்விக்கப்பட்டது