பக்கம்:காதலர் கண்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-8) காதலர் கண்கள் 55 தா, தா. " உன்னதமோ நின்கண்செய் பாக்கியந்தான் உத்தமன்ே என் அதரம் செய்பாக்யத் திற்கீடோ இத்தரையில் ' பிராணகாதா, என் அதரமானது செய்த பாக்கியத்தை யோசித்தால் உமது கண்கள் செய்த பாக்கியம் அதன் முன் என்னும் ? காதலி, என்ன விந்தை கேவலம் எனது கண்களே, தேவ ரும் மூவரும் தேடியும் கிடைக்கொணு உன் அதரத்துடன் ஒத்திட்டுக் கூறலாமோ ? என் கண்களல்ல என் தேக முழு துமே உன் பதமலருக்குச் சமான மாகாதே. பிராணநாதா, தம்மைத் தாமே இவ்வா றிழித்துக் கூறுவது நியாய மல்ல. நியாய மல்லவா ? நியாய மெடுத் துரைத்தால் ஒப்புக்கொள், இல்லாவிடின் நான் கூறியது தவறென்று ஒப்புக் கொள்கி றேன். --. என்ன நியாயம் பிராணநாதா கண்ணே, கேள் " உன்பாதம் மண்மீது வுறுத்துவதாற் சிவந்திடவும் என்றேகம் எல்லாமும் சிவந்திடவே யென் செய்கேன்!” உன் பாத கமலங்கள் பூமியின்மீது உறுத்துவதினுல் சற்றே சிவந்திடவும், அதனலே பூவையே, என் கண்கள் மாத்திரம் அல்ல, என் உடல் முழுதும் இவ்வாறு சிவந்திடுதற் கென் செய்வேன் ? * - பிராணநாதா, நான் உட்கார வேண்டுமென்று இந்த யுக்தி செய்திரோ உட்காரும் நீர் முன்பு. (பலவந்தமா யுட்காரச்செய்து, தானும் உட்காருகிருள்.) பிராணநாதா, உம்மை யொன்று கேட்கவேண்டு மென்றிருந் தேன். சற்று முன்பாக நான் உமது கண்ணுக்குப் புலப்படா விடினும் உமது ஹிருதயத்தில் இங் கிருப்பதாக அறிகிறே னென்று கூறினீரே அது எங்ங்ணம் ! Z கண்ணே, சந்திர னுதயமானவுடன் மேகங்கள் மறைத்த போதிலும் அதை யறிந்து நீலோற்பலம் எங்ஙனம் மலருமோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/60&oldid=787482" இலிருந்து மீள்விக்கப்பட்டது