பக்கம்:காதலர் கண்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தா. தா. தா. காதலர் கண்கள் (அங்கம்-1 ஆருவது காட்சி இடம்-தோட்டத்தில் வசந்த மண்டபம். காலம்-மாலை யோசித்தவண்ணம் உதயசிங் உட்கார்ந்திருக்கிருன். தாராபாய் வெகு அவசரமாய் வருகிருள். அப்பா, இங்கா இருக்கின்றீர்கள் ! உங்களைத் தேடி அரண் மனே முழுதுஞ் சுற்றிவந்தேன்.-என்ன இங்குத் தனியாய் உட்கார்ந்துகொண் டிருக்கிறீர்கள் முகம் ஒருவாருய் மாறி யிருக்கின்றது : என்ன விசேஷம் ? கண்மணி, உன்னிடம் நான் கூறக்கூடாத விஷயமு முண்டோ வே ருென்று மில்லை. நமக்கு நேர்ந்த சங்கடத் தினின்றும் நாம் யுக்தி செய்து தப்பித்துக் கொண்டபோதிலும், எப்படியும் ஒரு நாள் உண்மை வெளியாகுமே, அதற்கென்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்குள் உனக்கு எப்படியாவது தக்க புருஷனைத் தேடி விவாகஞ் செய்துவிட்டால், பிறகு என்ன நேர்ந்தபோதிலும் எனக்குக் கவலையில்லை ; உனது அழகிற்கும் அறிவிற்கும் அருங்குணத் திற்கும் அமைந்த புருஷனை நான் எங்கே தேடிக் கண்டு பிடிக்கப்போகிறேன் விரைவில் ? அப்பா, இதுவரையில் தாம் எத்தனையோ கூத்திரிய ராஜ குமாரர்களைப் பார்த்திருப்பீர்களே, ஒருவனவது உமது மனத் திற்குத் தக்கவகைத் தோற்றப்படவில்லையா ? தாராபாய், தாராபாய் ! ஒருவனும் அகப்படவில்லை. உண் மையைக் கேட்பாயாயின் என் மனத்திற்குத் திர்ப்திகரமான உனக்குத் தக்க புருஷன் அவ் வீர ைெருவன்தா னிருக்கிருன். கண்மணி, அவன் தான் உனக்குத் தக்க புருஷன் என்று எனக்குத் தோற்றுகிறது. ஆயினும் என் வாக்குதத்தத்தை நான் மறக்கவில்லை. நான் ஏதோ பலவந்திக்கிறேனென்று எண்ண வேண்டாம். அப்பா, நான்-சொல்வ-தென்றல்-எனக்குக்-கூச்சமா -யிருக்கிறது. - தாராபாய், என்னிடங் கூற உனக்குக் கூச்சமென்ன ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/65&oldid=787491" இலிருந்து மீள்விக்கப்பட்டது