பக்கம்:காதலும் கடமையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் § சரோஜா : டாக்டர், உங்களுக்காக நான் எவ்வளவு நேரம் வேண்டுமானுலும் காத்திருப்பேன். அது எனக்குச் சந்தோஷமே கொடுக்கும் கேசவன் : இனிமேல் நீ காத்திருக்க வேண்டிய தில்லை. நான் முடிவு செய்துவிட்டேன் சரோஜா... சரோஜா (ஆவலோடு) நிஜமாகவா டாக்டர்? என்னுடைய ஆறு வருவுக் கனவு பலிக்கும் நேரம் வந்து விட்டதா? கேகவன் : உன்னுடைய கனவு மட்டுந்தானு? என்னுடைய கனவும் பலிக்கப் போகிறது. இனி, நாம் கலியாணம் செய்து கொள்ளலாம். எனக்கு இனிமேல் தடை எதுவும் இல்லை. இதைச் சொல்லுவதற்காகத்தான் உன்னே இங்கே சந்திக்கும்படி கடிதம் அனுப்பினேன். சரோஜா (தழுதழுத்த குரலில்) : டாக்டர், இந்த வார்த்தைகளுக்காக நான் எத்தனையோ நாட்களாக ஏங்கிக் கிடந்தேன்-இன்றுதான் என் உள்ளம் குளிர்ந் திதி . கேசவன் : சரோஜா, இனிமேல் நீ என்னுடைய சரோஜா...நான் உன்னுடைய கேசவன்... (மெதுவாக அவள் கையைப் பிடிக்கிருன். காதல் ததும்ப சரோஜா பக்கத்தில் வருகிருள். காத லோடு கேசவனப் பார்க்கிருள்.) சரோஜா (மேலும் தழுதழுத்த குரலில்) : கேசவ். என் டாக்டர் கேசவ், நான், நான், உங்களுக்கு என்றுமே அடிமை. உங்களுக்கு அடிமை செய்யும் பாக்கியம் எனக்கு என் வாழ்நாள் முழுவதும் கிடைத்தால் அதுவே போதும், (கேசவன் அவளைப் பக்கத்தில் இழுத்துக் கொள்ளு §gsir...]