பக்கம்:காதலும் கடமையும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் ثاله (வெளியில் கார் வந்து நின்று ஹாரன் அடிக்கும் சப்தம் கேட்கிறது.1 அதோ, அது டாக்டர் கார்தான். அவர் இப் பொழுதே வந்திருக்கிரு.ர். இனி உனக்கென்ன சந்தேகம் அம் மா? மீனுட்சி : சரோஜா, போய்க் கதவைத் திறந்துவிடு. நான் சிக்கிரமாகக் கையலம்பிக் கொண்டு வருகிறேன். (மீனாட்சி அவசரமாக எழுந்து கையலம்பச் செல்லு கிருள். சரோஜா ஆவலோடு வீட்டுக் கதவைத் திறக்க விரைகின்ருள். அவள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கிக்கொண்டிருக்கிறது.) திரை கட்சி ஐந்து [கேசவன் வீட்டு வாயிலருகில் நிற்கிருன், வீதி விளக்கு வெளிச்சம் மங்கல்ாக அவன்மேல் விழு கிறது. அவன் முகம் இருண்டு தோன்றுகிறது. சரோஜா வீட்டின் வெளிக் கதவைத் திறந்து கொண்டு ஆவலோடு வெளியே வருகிருள். சரோஜா (ஆவலோடு) . கேசவ், இப்பவே அம்மா வப் பார்த்துச் சொல்ல வந்தீர்களா? நானும் இப் பொழுதுதான். கேசவன் : இல்லே சரோஜா, அம்மாவைப் பார்க்க வேண்டிய அவசியம் இனிமேல் இல்லை. நான் சொல்ல வந்தது வேறு விஷயம்? சரோஜா (சற்றுக் கவலை தோன்ற) : என்ன? ஏதோ கலக்கத்தோடு இருக்கிறீர்களே?