பக்கம்:காதலும் கடமையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் - 23 கேசவன் : நான் பெரிய தவறு செய்துவிட்டேன். என்னுடைய சுகத்தைப் பெரிதாக நினைத்து என் கடமை யைக் காற்றில் பறக்க விட்டுவிட்டேன். சரோஜா : நீங்கள் சொல்லுவது எனக்கு விளங்க வில்லை, கேசவ். வாருங்கள், உள்ளே சென்று சாவகாச மாகப் பேசலாம், உள்ளே வாருங்கள். கேசவன் : நான் உங்கள் வீட்டுக்குள்ளே இனி வர வேண்டிய அவசியமில்லை. நான், நான், கலியானம் செய்துகொள்ளப் போவதில்லை. - சரோஜா (திடுக்கிட்டு) : என்ன, என்ன சொன் னிர்கள்? நாம் பிரிந்து அரை மணி நேரங்கூட ஆக வில்லையே? அதற்குள் என்ன நேர்ந்தது? கேசவன் : உன்னைத் தனியாகப் பூங்காவில்சந்திக்க வேண்டுமென்ற ஆவலிலே அந்த ராஜூவின் மனைவியைச் சாக வைத்துவிட்டேன். நான்தான் அதற்குப் பொறுப் பாளி. ஒருவன் தன் ஆசை மனேவியை இழக்கச் செய்த எனக்கு இனிக் கலியானம் வேறு வேண்டுமா? மனைவி யோடு வாழ எனக்கு இனி யோக்கியதை ஏது? - சரோஜா (கவலேயோடு) என்ன? ராஜ மனைவி இறந்துவிட்டாளா? கேசவன் : ஆமாம். நான் அவளேப் பார்ப்பதற்கு முன்னலேயே அவள் இறந்துவிட்டாள். மனைவியை இழந்தவனுடைய பரிதவிப்பைத்தான் நான் பார்க்கச் . சென்றேன். சரோஜா : கேசவ். உள்ளே செல்லுவோம் வாருங் கள்-அமைதியாக இருந்து ஆலோசனை செய்யலாம். கேசவன் : இனி எனக்கு அமைதி ஏது? ஆலோசனை ஏது? நான் உள்ளே வரமாட்டேன். அம்மாளிடம் விஷ யத்தைச் சொல்லிவிட்டாயா?