பக்கம்:காதலும் கடமையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 27 அம்மா, கோபமா இருக்கிரு.ர். ஒருநாளும் இப்படி இருக்கமாட்டார். அதிலும் நீங்கள் வந்திருக்கிறபோது... சரோஜா : அம்மா மூர்ச்சையாக மயங்கிக் கிடக் கிருளென்று சொன் னயா? ராமன் (திடுக்கிட்டு ) . நம்ம அம்மாவுங்களா? அதை நீங்கள் என்னிடத்திவே சொல்லலேயே? சரோஜா : அதற்காகத்தான் டாக்டரிடம் ஒடி வந்தேன். அவரிடத்திலே போய்ச் சொல்லு-அம்மா திடீரென்று மயங்கி விழுந்துவிட்டார்கள். பேச்சே கிடை யாது. விஷயத்தைச் சொல்லிவிடு. பிறகு அவருக்கு இஷ்டமாக இருந்தால் வந்து பார்க்கட்டும். இல்லா விட்டால் தெய்வம் விட்டபடி ஆகிறது. நான் போய்ப் பக்கத்திலேயாவது இருக்கிறேன். அங்கே யாருமில்லை. நீ டாக்டரிடம் சொல்லிவிடு. நான் போய்விட்டதாக வும் சொல்லு. (வேகமாக வீட்டை நோக்கிப் போகிருள். ராமன் கவலையோடு அவளேப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு அவள் மறைந்ததும் உள்ளே செல்லு கிருன்.) - - திரை காட்சி ஏழு (கேசவன் சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டு ஆழ்ந்த யோசனையிலிருக்கிருன். விளக்கு மங்க லாக எரிந்துகொண்டிருக்கிறது. ராமன் மெது வாக வந்து முன்னுல் நிற்கிருன்..} கேசவன் : என்ன ராமா, மறுபடியும் எதற்கு இங்கே வந்து நிற்கிருய்? ராமன் : ஸார், சரோஜா அம்மா அவுங்க தாயா ருக்கு ரொம்ப ஆபத்தா இருக்குதுங்களாம்.