பக்கம்:காதலும் கடமையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 4 காதலும் கடமையும் சரோஜா : அப்படியே செய்கிறேன் டாக்டர். (புறப்பட்டுப் போகிருள். இருவருடைய உள்ளத் திலும் பெரிய போராட்டம் ஏற்படுகிறது.1 திரை காட்சி மூன்று (பிரசவ விடுதியிலே ஒர் அறை. குழந்தையொன்று தொட்டிவிலே துரங்கிக்கொண்டிருப்பதற்கு அறிகுறியாக ஒரு பக்கத்தில் தொட்டில் தெரி கிறது. நாகவல்லியும் சரோஜாவும் பேசிக் கொண்டிருக்கிரு.ர்கள். நாகவல்லிக்கு வயது இருபது இருக்கலாம். கபடமறியாத பெண் . னென்பதை அவள் பேச்சுக் காண்பிக்கிறது. காலே பத்து மணி.) நாகவல்வி : அக்கா நீங்கள் எனக்குத் தெய்வம் போல. உங்களை ஒருநாளும் நான் மறக்கமாட்டேன். சரோஜா : நான் உனக்கு அப்படி என்ன உதவி செய்துவிட்டேன்? இந்த ஏற்பாடுகளெல்லாம் டாக்டர் தான் செய்கிருர், அவரைத்தான் நீ வாழ்த்தவேனும். நாகவல்லி : இருந்தாலும் நீங்கள் இல்லாவிட்டால் நான் என்ன கஷ்டப்பட்டிருப்பேனுே? முதல் பிரசவம் ரொம்பக் கஷ்டமா இருக்கு மென்று எல்லோரும் சொன் ஞர்கள். அப்படித்தான் ஆய்விட்டது. உங்கள் உதவி யால்தான் நான் தப்பிப் பிழைத்தேன். குழந்தையும் செளக்கியமாகவே இருக்கிறது. சரோஜா : குழந்தை துரங்குகிருளு? நாகவல்லி : இப்பத்தான் துரங்கினன். அவ: மட்டும் பெண்ணுய்ப் பிறந்திருந்தால் உங்கள் பெயரை தான் அதுக்கு வைத்திருப்பேன். 3. ੋਂ த்