பக்கம்:காதலும் கடமையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காதலும் கடமையும் பேசப் போகிறேன். நீங்கள் என்னை வரச் சொன்னது எனக்கே நல்லதாச்சு. நான் போய்ட்டு வர்ரனம்மா. (புறப்பட்டுப் போகிருன்.) காட்சி ஆறு (டாக்டர் கேசவன் மாளிகையில் ஒர் அறை கேசவன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக் கிருன். ராஜூ வணக்கம் தெரிவித்துக் கொண்டே உள்ளே நுழைகிருன். மாலை நேரம்.) ராஜூ : டாக்டர் ஸார், உங்களிடம் ஒரு விஷயம். பேசலாமென்று வந்தேன். கேசவன் : வாருங்கள் ராஜு. இப்படி வந்து உட்காருங்கள்-குழந்தை செளக்கியமாக இருக்கிறதா? ராஜு : குழந்தையும் தாயும் செளக்கியமாக இருக்கிருர்கள். நீங்கள் அவர்களுக்குப் பண்ணின. உபகாரத்துக்கு உங்களே என்றைக்கும் மறக்க மாட் டோம், டாக்டர். கேசவன் : அதிருக்கட்டும் ராஜு, இப்போ என்ன விஷயமாக வந்தீர்கள்? - ராஜு : வாழ்க்கையிலே எனக்கு இப்போ ஒரு கவலையும் இல்லீங்க. செளக்கியமா சந்தோஷமா இருக் கிறேன். என் மனேவியும் அப்படித்தான். ஒரு குறையும், இல்லீங்க. கேசவன் : அப்படியா? அதைக் கேட்க எனக்கும் சந்தோஷந்தான். -