பக்கம்:காதலும் கடமையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் వీడ ராஜு : அந்த அம்மா சரோஜா இருக்காங்களே, அவ்ங்களிடத்திலே என் பெண்ஜாதி நாகவல்லிக்கு உயிருங்க. அத்தனை பிரியம். அந்த அம்மா அத்தனை நல்லவங்க, r - கேசவன் : ம்...... ...இப்பொழுது நீங்கள் வந்த காரியத்தைச் சொல்லுங்கள். ராஜு : டாக்டர் லார், நான் என்னவோ சொல்ற தாக நினைக்கப்படாது...நான் சொல்றதைக் கொஞ்சம் சாவகாசமாகக் கேட்கவேணும். கேசவன் : சொல்லுங்கள், இத்தனை பீடிகை யெல்லாம் எதற்கு ? - ராஜு (தயங்கி): நீங்கள் அந்த அம்மா சரோஜா வைக் கல்யாணம் பண்ணிக்கவேணும். கேசவன் : என்ன, என்ன சொன்னீர்கள் ? ராஜு : ஆமாம் டாக்டர், நீங்கள் கட்டாயம் பண்ணிக்கொள்ளத்தான் வேணும். என்னமோ நான் அன்றைக்குக் கோபமாகப் பேசிவிட்டேன். அதனுல்தான் நீங்கள் கல்யாணமே பண்ணிக்கிறதில்லேன்னு சொல்வி விட்டீங்களாமே.........? - - கேசவன் : யார் உங்களுக்கு அப்படிச் சொன்னது? ராஜூ : எல்லாம் எனக்குத் தெரியும் டாக்டர். நீங்கள் நினைக்கிறமாதிரி நான் இப்போ மனசிலே கவலைப் பட்டுக்கொண்டு இருக்கவில்லை. அதஞவே நீங்கள் இப்படி விரதம் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. - கேசவன்: ராஜு, நீங்கள் பேசுகிறது எனக்குப் புரியவில்லை. என்னுடைய விரதத்தைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும் ? -