பக்கம்:காதலும் கடமையும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 காதலும் கடமையும் சரோஜா : அதற்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனல் நீங்கள் என்னைப் பொய் பேசுகின்றவள் என்று சந்தேகிப்பதை நான். நான் மெளனமாக ஏற்றுக்கொள்ள முடியாது. கேசவன் : சரோஜா குழந்தைகளை ஆதரிக்க ஒரு குழந்தை விடுதி பால பிருந்தாவனம் என்ற பெயரில் ஆரம்பிக்கப் போகிறேன் என்பது உனக்குத் தெரியுமா? சரோஜா.: ஆமாம், கம்பவுண்டர் சொல்லிக்கொண் டிருந்தார். தனியாக வேருே.ரிடத்திலே அந்த விடுதி. இருக்குமென்று அவர் சொன்னர். அதைப் பற்றி இப் பொழுது ஏன் கேட்கிறீர்கள்? - கேசவன் : நீ அதிலே வேலை செய்யப் போக வேண்டும். குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண் டியது உன்னுடைய பொறுப்பு. சரோஜா : சரி, டாக்டர். ஆனல் என்னை எதற்காக அங்கே அனுப்ப விரும்புகிறீர்கள்? கேசவன் : அப்பொழுது நாம் ஒருவரையொருவர் பார்ப்பதற்கே சந்தர்ப்பம் இருக்காது, நான் இரண்டு நாட்களுக்கொருதரம் மாலை வேளையிலே குழந்தைகளைப் பார்க்க அங்கே வந்து அரைமணி நேரம் இருப்பேன். அப்போ மட்டும் என்னை நீ பார்க்கலாம். அதுவும் குழந்தைகள் கூட்டத்தோடுதான் என்னைப் பார்க்க வேண்டும். தனியாக என்னைப் பார்க்க நீ வரப்படாது. சரோஜா : ஊரார் பேச்சுக்காக எனக்கு இந்தத் தண்டனையா டாக்டர்? இருந்தாலும் எனக்குச் சந் தோஷம்தான். இதிலிருந்தாவது ஊர் வதந்தி கொஞ்சம் மறையுமானுல் நல்லது?