பக்கம்:காதலும் கடமையும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 63 கேசவன் : ஊரார் பேசுவதற்கு நான் பயப்பட வில்லை. அவர்கள் என்ன வேண்டுமானலும் பேசிக் கொள்ளட்டும். அதைப்பற்றி--நான் கவலைப்படமாட் டேன். இருந்தாலும் இந்த ஏற்பாடு நமக்கே நல்ல தென்று நான் நினைக்கிறேன். - சரோஜா : எனக்கு முழுச் சம்மதம் டாக்டர். அம்மாளேப் பற்றிய கவலையும் இருக்காது. கேசவன் : சரி, நீ போகலாம். (சரோஜர் புறப்படுகிருள். எழுந்து நடந்துகொண் டிருந்த கேசவன் ஆழ்ந்த யோசனையிலிருக் கிருன். திடீரென்று சரோஜாவைக் கூப்பிடு - கிருன்.) ...ம்...சரோஜா. நீ போவதற்கு முன்னலே ஒரு விஷயம்...நீ பொய் பேசுவாயென்று நான் ஒருநாளும் நினைத்ததில்லை. சரோஜா : ரொம்ப நன்றி, டாக்டர். [போகிருள்.) திரை காட்சி எட்டு (சரோஜாவின் வீடு. மீனுட்சி ஒரு பக்கத்திலே கட்டிவிலே பிரக்ஞையற்றுப் படுத்திருக்கிருள். சரோஜா கவலைதோய்ந்த முகத்தோடு அவளைப் பார்த்துக்கொண்டிருக்கிருள். அந்தச் சமயத் திலே நாகவல்லி உள்ளே நுழைகிருள். வந்த வள் சற்றுநேரம் மீளுட்சியைக் கவனித்து விட்டுப் பிறகு சரோஜாவிடம் பேச ஆரம்பிக் கிருள். இருவரும் அறையின் முன்பகுதிக்கு வந்துவிடுகிரு.ர்கள். மாலை நேரம்.) நாகவல்லி (மெதுவாக) அக்கா, அம்மாளுக்கு உடம்புக்கென்ன? o 在冷战 ...?