பக்கம்:காதலும் கடமையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காதலும் கடமையும் நான் வந்து ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந் துவிட்டும் போனேன். திடீர்னு இப்போ எப்படி வந்தது? (சரோஜா மெளனமாக இருப்பதைக் கண்டு நா: வல்லி மேலும் கேட்கிருள்.) அக்கா, இப்போ அம்மாளுக்கு அதிர்ச்சி உண்டாகிற மாதிரி ஏதாவது நடந்ததா? சரோஜா (சற்றுநேரம் மெளனமாகஇருந்து பிறகு). ...ம்...அதெல்லாம் பேசி என்ன பிரயோஜனம்...: நாகவல்லி, நீ பால பிருந்தாவனத்திற்குப் போய் என் னுடைய கைப்பெட்டியை எடுத்து யாரிடத்திலாவது அனுப்புகிருயா? அவசரத்திலே நான் ஒன்றுமே எடுத்து வரவில்லை. நாகவல்லி : நான் போகிறேன் அக்கா. ஆளுல், முதலிலே ஒரு விஷயம் எனக்குச் சொல்லவேணும்எதுக்கு டாக்டர் உங்களைப் பாலப் பிருந்தாவனத்துக்குப் போகச் சொல்லிவிட்டார்? சரோஜா : அதைக் கவனிக்க யாராவது வேண் டாமா? நாகவல்லி : அக்கா, இதை நான் நம்பவேமாட் டேன். குழந்தை விடுதியைக் கவனிக்கிறதுக்காக மூணு மாசமாக வேலை பழகியவர்கள் இங்கே வந்திருக்கிறது எனக்குத் தெரியாதா? நீங்களே சொல்லியிருக்கிறீர்களே? என் பையனையும் அங்குக்கொண்டுபோகும்படி சொன்னீர் களே? அவர்களெல்லாம் இருக்கிறபோது நீங்கள் எதுக்கு அங்கே போகவேனும்? சரோஜா : நாகவல்லி, நீ குழந்தைமாதிரி சும்மா இப்படியெல்லாம் கேட்காதே.