பக்கம்:காதலும் கடமையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 75 நாகவல்லி : சும்மா இருங்க-அப்படியெல்லாம் பேசாதீங்க... ராஜு : டாக்டரே, இந்த நாகவல்லி விஷப் பாம்பு உங்களைக் கடிச்சுட்டுதா? என்னைக் கடிச்சுத்தான் நான் இந்தக் கதிக்கு வந்தேன்...டேய்...எங்கடா அவன்-என் குழந்தைக்குக் கண்னைப் பிடுங்கினவன்-ஆரடா அவன்? (கண்ணே உருட்டி விழிக்கிருன்.) கேசவன் : ராஜு, இப்படி வந்து உட்காருங்கள். உங்களிடம் கொஞ்சம் பேசவேணும் வாருங்கள். (நாற்காலியில் அமர்கிருன்.) ராஜு : பேசறதா? உங்கிட்டியா பேசறது? (உரக்கச் சிரிக்கிருன்) ஒரு பொம்பளே யைக் கலியாணம் பண்ணிக்கத் திராணியில்லாதவன்-இங்கே எதுக்கு வந்தே? அவள்தான் அவுங்க அம்மாளைப் பேயா என் மேலே விட் டுட்டாளே? அடேய்...டேய்...யாருடா அந்தப் பேய்? சரோஜாவா? அவ அம்மாளா?...டாக்டர், அந்தக் கதிவைச் சாத்து...ஒடு ஒடு...விடாதே விடாதே... அடடே கரை மேலே ஒடுதே...என்னுேட ஒடி வாங்க, ஒடிவாங்கோ-அந்தப் பேயைப் பிடிடா, பிடிடா. (திடுதிடுவென்று அங்குமிங்கும் ஒடுகிருன். பிறகு தடாரென்று நாற்காலியில் மோதி விழுகிருன்..} சரோஜா : நாகவல்வி, அவர் கீழே விழுந்துவிட் உாரே? நெற்றியிலேகூட அடிபட்டிருக்கிறது. கேசவன் (சட்டென்று எழுந்து வந்து) . . சரோஜா, நீ பேசாமல் இரு...நாகவல்லி, ஒரு செம்பிலே தண்ணிர் கொண்டு வா. அவர் முகத்திலே தெளிக்கலாம். (நாகவல்லி வேகமாகச் - செம்பில் தண்ணிர் கொண்டு வருகிருள்) நாகவல்லி : இதோ, தண்ணீர் இந்தாங்கோ,