பக்கம்:காதலும் கடமையும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 க்ாதலும் கடமையும் சரோஜா : நஷ்டமா? இதுவரையிலும் நீ சொல்ல வில்லையே? நாகவல்லி : நேற்றுத்தான் எனக்கும் தெரியும் நேற்றைக்கு நல்ல நினைவு இருந்தபோது அவர் எல்லா வற்றையும் சொன்னர். அழுதுகொண்டே சொன்னர். சரோஜா : அதையெல்லாம் இப்போ ராஜு நினைக. கப்படாது. அவர் மனதிலே கவலையே இல்லாமல் இருக்க வேணும். நாகவல்லி : அக்கா, அவருக்கு நல்லநினைவு வருகிற போதெல்லாம் என்னமோ ரொம்பக் கவலையாக இருக் கிறார்...ஒன்னும் என்னிடங்கூடச் சொல்லுகிறதில்லை. என்னை க் கண்டால்கூட அவருக்கு இப்போ அத்தனை பிடிக்கவில்லை. சரோஜா : எல்லாம் கொஞ்ச நாளிலே சரியாகி விடும். அவர் மட்டும் தைரியமாக இருக்கவேணும். கவலைப்படாதே. நாகவல்லி : டாக்டர் எப்போ வருவார்? இங்கே நம்மை விட்டுவிட்டுத் திருச்சினப்பள்ளிக்குப் போனவர் அப்புறம் வரவே இல்லையே? சரோஜா வராவிட்டாலும் தினமும் மன மருத்து வருக்குக் கடிதம் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார். ராஜூவின் நிலைமையைப் பற்றித் தினமும் அவருக்கு இங்கிருந்து எழுதியனுப்புகிருர்கள். நாகவல்லி : அக்கா. டாக்டர் உங்களுக்குக் கடிதம் எழுதமாட்டாரா? சரோஜா : எனக்கு எ த ற் கு எழுதுகிருர்? இன்றைக்கு இங்கே வருகிற விஷயத்தைக்கூட மன மருத்துவருக்குத்தான் எழுதியிருக்கிருர்,