பக்கம்:காதலும் கடமையும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 8ፇ தாகவல்லி (ஆவலோடு) : டாக்டர் இன்றைக்கு வருவாரா அக்கா? சரோஜா : ஆமாம், இன்னும் கொஞ்சநேரத்திலே வந்துவிடுவார். நாகவல்லி : இப்போ ஒன்னும் ரயில் இல்லையே? சரோஜா : அவர் காரிலேயே வருவார். நாகவல்லி : காரிலேயா? இத்தனை தூரத்திற்குக் காமலேயே வருவாரா? சரோஜா : இதென்ன துாரம் அவருக்கு? மேலும் அவருக்கு வேலை செய்யும் நேரம் தவிர மற்ற நேரத்தி லெல்லாம் காங்காவது சுற்றிக்கொண்டே இல்லாவிட்டால் பிடிக்காது. நாகவல்லி : அக்கா, நானும் நம்ம ஊரிலே பார்த் திருக்கிறேன். சதா டாக்டர் ஏதாவது பண்ணிக் கொண்டே இருக்கிரு.ர். சும்மா கொஞ்ச நேரங்கூட இருக்கமாட்டார் போலிருக்கிறது. சரோஜா : சதா வேலை செய்வதிலேதான் அவர் நக்கு இப்போ நிம்மதி. சும்மா இருக்க அவராலோ முடியாது. நாகவல்லி : ஆமாம் அக்கா. அவரும் கல்யாணம் பண்ணிக் குடும்பமும் குழந்தையுமா இருந்தால் அப்போ அவர் மனசுக்கு நல்லா இருக்கும். [கேசவனுடைய கார் ஹார்ன் சப்தம் கேட்கிறது.1 சரோஜா : அதோ, டாக்டர் வந்துவிட்டார்ாஜூ இன்னுமா துரங்கிக்கொண்டிருக்கிருர்? நாகவல்லி : ஆமாம்; இன்னக்கி என்னமோ மணி ஐந்தாகியும் இன்னும் தூங்குகிரு.ர்.