பக்கம்:காதலும் கடமையும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் f கேசவன் (போய்க் கொண்டே) : ஏய்யா, விஷ ய்த்தை மாற்றி மாற்றிச் சொல்லுகிறீரே? நேற்றி லிருந்தா உடம்புக்குச் சரியில்லை? ராஜு : இல்லீங்க... ஆமாங்க...மேலெல்லாம் ஒரே குடைச்சலாக இருக்குதுன்னு சொன்ளுைங்க. கேசவன் (சற்று நின்று) . நீங்கள் சொல்லுவதே எனக்குச் சரியாகப் புரியவில்லை. என்னமோ மாற்றி மாற்றிப் பேசுகிறீர்கள்? ராஜு : நான் ஒண்னும் மாற்றலிங்க...உள்ளதைத் தான் சொன்னேனுங்க. கேசவன் : இப்போ நான் ஒரு அவசர காரியமாகப் போகிறேன். போய் வந்ததும் இன்னும் அரைமணியிலே உங்கள் வீட்டுக்கு வந்து பார்க்கிறேன். வீடு எங்கே இருக்கிறது? ராஜு : அடுத்த தெருவிலேதானுங்க-ரங்கசாமி நாயுடு தெரு, நாலாம் நம்பர் வீடு...என்.பேரு, ராஜூங்க ......இப்பவே வந்தா நல்லதுங்க.....நிலேமைரொம்ப மோசமா இருக்குதுங்க. நாலாம் நம்பர் விடுங்க, ரங்கசாமி நாயுடு தெரு. கேசவன் : ராஜு, நீங்கள் வீட்டுக்குப் போங்கள். நான் அரைமணியிலே கண்டிப்பாக வந்து பார்க்கிறேன்... உங்கள் வீட்டு விலாசத்தையும் இதோ குறித்துக் கொண் டேன். (சிறிய நோட்டுப் புத்தகத்திலே எழுதுகிருன்.) ராஜூ இப்பவே வரப்படாதுங்களா டாக்டர்? நிலைமை கேவலமாகத்தான் இருக்குது. ஒருவேளை நீங்கள் வர்ரத்துக்குள்ளே...ஆனல் அரைமணியிலே வந்தாலும் போதும், எதுக்கும்...