பக்கம்:காதலும் கடமையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 காதலும் கடமையும் கேசவன்: அதென்ன காரியம்? ராஜு: நான் மனசுவிட்டுப்பேசலாமா டாக்டர் கேசவன்: சும்மா தாராளமாகச் சொல்லுங்கள். ராஜு: நீங்கள் சரோஜா அம்மாவைக் கலியாணம் பண்ணிக்கவேணும். அப்பொழுது எனக்கு ஒரளவு கவலை தீரும். கேசவன்: ராஜூ, எங்கள் கலியானப் பேச்சில்தான் உங்களுடைய கவலையே முதலில் ஆரம்பித்தது. இப்பவும் அதனால் உங்கள் கவலை தீரப்போகிறதில்லை. ராஜு: நீங்கள் அ ப் ப டி ச் சொல்லக்கூடாது. அதிலேதான் என்னுடைய வாழ்க்கையே இருக்கிறது. நான் ஏதோ உபசாரத்திற்குச் சொல்லுவதாக நீங்கள் நினைக்கப்படாது. - கேசவன்: நானும் சரோஜாவும் இப்பொழுது உங்களுக்கு உதவியாக இருப்பதை எண்ணி நீங்கள் இப்படி ஆசைப்படுகிறீர்கள். இதல்ை எனக்குச் சந்தோ ஷம் அதிகப்படுமென்று நீங்கள் நினைத்தால் அது சசி யல்ல. பொதுமக்களுடைய சேவைதான் இன்றைக்கு எனக்குச் சந்தோஷம். - ராஜு: அதற்கு சரோஜா உதவியாகத்தானே இருக்கிருர்கள்? அவர்கள் அதற்கு இடைஞ்சலாக இல்லையே? - கேசவன்: இப்பொழுது இருக்கிறது போலவே சரோஜா உதவியாக இருப்பதிலே எனக்கு ஆட்சேப மில்லை. ராஜு: கலியாணம் செய்துகொண்டால் இந்த சேவை இன்னும் சந்தோஷமாக நடக்கும். கேசவன்: ராஜூ, கலியாணம் என்று மட்டும் என்னிடம் பேசாதீர்கள். இந்த விஷயத்திலே என் அடைய தீர்மானத்தை மாற்றமுடியாது.