பக்கம்:காதலும் கடமையும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 9? ராஜு: ஏதோ என் மூத்த மனைவி விஷயத்திலே கடமை தவறிப் போனதைக் குறித்துத்தானே நீங்கள் இப்படி விரதம் எடுத்திருக்கிறீர்கள் ? - - கேசவன்: அதுதான் உங்களுக்கு முன்னமேயே தெரியுமே? ராஜு: டாக்டர். நீங்கள் அந்த விஷயத்தில்ே கடமை தவறவில்லை என்று நான் நிரூபித்தால்? . கேசவன்: அப்போ நிலைமை வேருகத்தான் இருக் கும். ஆளுல், இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருப் பதிலே என்ன பிரயோசனம்? உங்கள் மூத்த மனைவி இனிமேல் உயிர்பெற்று வரப்போகிருiர்களா என்ன? ராஜு: டாக்டர், நீங்கள் என்னுடைய வேண்டு கோளுக்காவது இணங்கப்படாதா? நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். கேசவன்: ராஜூ, உடம்புக்கு சரியில்லாத உங்க ளோடு நான் கண்டிப்பாகப் பேசவிரும்பவில்லை. இந்த ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் என்னிடம் பேச வேண்டாம். இது என்னுடைய சொந்த விஷயம்." ராஜு (விசனத்தோடு): அப்போ நான் பயித்திய மாகவே இருந்துவிடுகிறேன். எனக்கு இந்த வைத் தியமும் வேண்டாம்: ஒன்னும் வேண்டாம். கேசவன்: இதென்ன? நீங்கள் குழந்தைமாதிரி, பேசுகிறீர்கள்? நான் உங்களைப் பார்க்க வந்ததே தப் பாகப் போய்விட்டது. இப்படியெல்லாம் பேசி மனசை அலட்டிக் கொள்ளாதீர்கள். - - --- ராஜு: உங்களுக்கு என் மனசைப் பற்றி என்ன தெரியும்? உங்களுக்கு வெளுத்ததெல்லாம் பால். கடமை, கடமை! அதைத் தவிர வேறென்ன தெரியும்?