பக்கம்:காதலும் கடமையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 காதலும் கடமையும் ராஜு : உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். சரோஜாவைக் கலியாணம் பண்ணிக்கும்படி டாக்ட ரிடம் ரொம்ப வற்புறுத்தி நான் பேசினேனே இல்லையோ அதற்குக் காரணம் சரோஜா என்றுதான் டாக்டர் நினைக்கிரு.ர். சரோஜா சொல்லிக் கொடுத்துத்தான் நான் அவரை இன்றைக்குக் கேட்டதாக அவருக்குப் பட்டிருக்கிறது. அதற்காகத்தான் கோபம். நாகவல்லி : அக்காள் உங்களிடத்திலே ஒரு நாளாவது கலியானத்தைப் பற்றிப் பேசினதே இல்லையே? - ராஜு : அது அவருக்கு எப்படித் தெரியப் போகிறது?...ம்... (பெருமூச்சு விடுகிருன்.) மறுபடியும் எனக்குப் பைத்தியமே வந்துவிடடால நல்லது. நாகவல்லி : எதுக்கு இப்படிப் பேசறிங்க? ராஜு : நாகவல்லி உனக்கு ஒன்றுமே தெரியாது. ஆந்த டாக்டருக்கும் ஒன்றுந் தெரியாது. நாகவல்லி : எணக்கொன்னும் தெரியாது. மெய் தான். ஆளுல் அந்த டாக்டருக்கா ஒன்னுந் தெரியாது? ராஜு (சற்று வெறுப்போடு) : நாகவல்லி, சரோ ஜாவை இங்கே கொஞ்சம் கூப்பிடு. உன்னேடு பேசிப் பிரயோசனமில்லை. - (நாகவல்லி உள்ளே போகிருள். ராஜு ஆழ்ந்த யோசனையிலிருக்கிரு:ன். சிறிது நேரத்தில் சரோஜா வருகிருள்.) - சரோஜா : கூப்பிடீர்களா? ராஜா : நீங்கள் ரயிலுக்குப் புறப்படுகிறபோது டாக்டருக்கு ஒரு கடிதம் கொடுக்கிறேன். அதை நீங்கள் அவரிடத்திலே கொடுத்துவிடுவீர்களா? -