பக்கம்:காதலும் கடமையும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் ġġ நிச்சயமாக விளங்கிவிட்டது. கடவுள் எனக்குச் சரியான தண்டனை கொடுத்துவிட்டார். நாகவல்லியின்மேல் எனக்கிருந்த ஆசையால் நானே என் முதல் மனைவியைக் கொன்றுவிட்டேன். அவள் இறந்துபோனல் பிறகு நான்-சந்தோஷமாக நாகவல்லியை மணந்துகொண்டு வாழ முடியும் என்று நம்பினேன். ஆனல் ஒவ்வொரு காரியமும் என் நம்பிக்கை தவறு என்று காட்டிவிட்டது. உங்களை சாட்சியாக வைத்து உலகத்தை ஏமாற்ற எண்ணி னேன். கடைசியிலே நீங்களே எனக்குத் தண்டனை கொடுக்கும் கருவியாக ஏற்பட்டுவிட்டீர்கள். உங்க ளுக்குத் தெரியாமலேயே கடவுள் உங்களை அப்படி உபயோகப்படுத்திவிட்டார். நீங்கள் கடமையொன்றும் தவறவில்லை. என் வீட்டிற்கு வந்து என் முதல் மனைவி யைப் பார்க்க வரும்படி உங்களை நான் கேட்டேனே அதெலாம் உலகத்தை ஏமாற்றத்தான். நான் உங்களிடம் வருவதற்கு முன்னலேயே அவள் உயிர் நீங்கிவிட்டது. ஏதோ திடீரென்று நோய் வந்ததாகவும் டாக்டரிடம் காட்டி வைத்தியம் செய்ய முயன்றதாகவும் நான் எல்லோரையும் நம்பும்படி செய்யத்தான் உங்களைக் கூப்பிட வந்தேன். அது உங்கள் வாழ்க்கையை இப்படிப் பாதிக்கும் என்று எனக்கு அப்பொழுது தெரியாது. அதுவே என் மனத்தையும் சுட்டெரித்துப் பைத்திய மாக்கிவிட்டது. இந்தக் குற்றத்தைச் சுமந்துகொண்டு என்னல் சந்தோஷமாக வாழ முடியாது. இப்பொழுது எனக்கு உயிரே ஒரு பாரமாகிவிட்டது. இனி நான் வாழ விரும்பவில்லை. என் முதல் மனேவிக்கு நான் கொடுத்த விஷத்திலே இன்னும் பாக்கி என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அதுதான் எனக்கு இப்போது அமிர்தம். நீங்கள் இந்தக் கடிதத்தைப் பார்ப்பதற்கு முன்னுல் நான் இந்த உயிர்ப் பாரத்தை நீக்கிக்கொள்ளுவேன். நாகவல்லி