பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காதலும்கல்யாணமும்

அவன் சிரித்தான்; “ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று அவள் கேட்டாள்.

‘ஒன்றுமில்லை. உனக்கு இல்லாததை எனக்கு இல்லை என்று சொல்கிறாயே, என்று நினைத்தேன்; சிரிப்பு வந்து விட்டது!’

காதலன் இப்படிச் சொன்னானோ இல்லையோ, ‘ரொம்பச் சரி; அப்படித்தான் நானும் நினைக்கிறேன். ஏனெனில், புத்தி உள்ளவர்கள் காதலிப்பதில்லை’ என்று மணி தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அதற்குள் காபியும் கையுமாக வந்து நின்றான் சங்கர். அதை வாங்கி ஒரு வாய் குடித்ததும் காதலி சொன்னது கேட்டது.

‘நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை; இருந்தால் உங்களை நான் காதலித்திருக்க மாட்டேன்’

அவ்வளவுதான்; ‘அடிச் சக்கை, கொன்றுவிட்டாளே” என்று தன்னை மறந்து எழுந்து நின்றான் மணி. ‘அவசரப் படாதீர்கள்; இப்போது அவன் அவளைக் கொல்லப் போகிறான், பாருங்கள்’ என்றான் சங்கர். மணி உட்கார்ந்தான்; காதலன் சொன்னான்:

‘இப்போது மட்டுமென்ன, என்னை நீ காதலிப்பதாகத் தெரியவில்லையே, எனக்கு?”

‘அதைத் தெரிந்துகொள்ளும் வழி இதுவல்ல; வேறு!” “இருக்கலாம்; ஆனால் அவற்றுக்கெல்லாம் அடிப்படை இதுவே!”

‘'காதலுக்கு இதுதான் அடிப்படை என்றால், அதை நான் வெறுக்கிறேன்’

‘வெறுப்பும் விருப்பும் இனி உன் கையில் இல்லை; என் கையில்தான் இருக்கிறது!”

இதை அந்தக் காதலன் சொன்னதுதான் தாமதம், இருவரும் கட்டிப் புரளும் சத்தம் மணியின் காதில்