பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 காதலும் கல்யாணமும்

‘வீண் வேலை, சார்’ என்றான் அவன் உதட்டைப் பிதுக்கி.

“என்னடா, இப்படிச் சொல்கிறாய்?”

“வேறு எப்படிச் சார் சொல்ல முடியும்? அவர்களுக்குத் தெரியாமல் இவர் இங்கே ஒன்றுமே செய்வதில்லையே, απτήit ‘’

‘என்ன? ‘

“ஆமாம் சார், மாதந்தோறும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ‘மாமூலை ஒழுங்காகக் கொடுத்துவிட்டுத்தான் இவர் சட்டத்துக்கு விரோதமாக இங்கே என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார்!”

‘அட, பாவிகளா இதில் ஒழுங்கு வேறு வாழுகிறதா, ஒழுங்கு?”

‘சட்டத்துக்கு அடுத்தாற்போல் அதிகமாகப் பேசப்படுவது அதுதானே சார்?”

“ஆமாம், இங்கே எல்லாமே பேசத்தான் படுகிறது!”

‘ஏன், எழுதக் கூட எழுதுகிறார்கள், சார்’

‘என்ன இழவோ! நின்று சாதிக்கும் தெய்வமோ இங்கே நின்றுகொண்டே இருக்கிறது; அன்றே சாதிக்கும் அரசோ இங்கே அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு இருக்கிறது. இரண்டும் இப்படியிருந்தால் இந்த உலகத்துக்கு என்று தாண்டா விமோசனம்?”

‘இது வேண்டாத கவலை சார், உங்களுக்கு? ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார்’ என்று நம் வள்ளுவர் பெருமான் கூடச் சொல்லியிருக்கிறார், பாருங்கள்! அதுதான் சார், நல்ல வழி!’

‘அவர் கூட எதையும் ஒரு நிலையில் வைத்து, எதை யும் ஒரு நிலையில் பார்த்து, ஒன்றையும் சொல்லியி