பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 103

ருப்பதாகத் தெரியவில்லையேடா, எனக்கு? கொஞ்சம் நிதானமாகப் பார்க்கப் போனால், கல்யாண வீட்டுக்கும் அவர் பூசணிக்காயாயிருந்திருக்கிறார், கருமாந்திர வீட்டுக்கும் அவர் பூசணிக்காயாயிருந்திருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, எனக்கு”

‘அவர் என்ன செய்வார், பாவம்! அதுதான் சார், அந்தக் காலத்திலேயே அவருக்கும், பிழைக்கும் வழியா யிருந்திருக்கிறது; அதுவேதான் சார், இன்றும் நாளையும் கூட நமக்கெல்லாம் பிழைக்கும் வழியாயிருக்கிறது, இருக்கப்போகிறது”

‘'வேண்டாம்; அப்படிப்பட்ட உலகத்தில் இன்று வேண்டுமானால் நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்; நாளை நான் வாழவே வேண்டாம்’

இதைச் சொன்னதும் அவன் நிற்கவில்லை; காலில் இருந்த செருப்பைக் கழற்றி மறுபடியும் விட்ட இடத்திலேயே விட்டு விட்டுக் கட்டிலின் மேல் தொப்பென்று விழுந்தான். விழுந்தவன், தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதான்.

அந்த அழுகையினுடே ஒரு பாடல்-பாரதியாரின் பாடல்தான் அது ஆனால் அவன் வழக்கமாகப் பாடும் பாடல்-அவனுடைய இதயத்தின் அடிவாரத்தில் இருந்து மெல்ல எழுந்து ஒலித்தது:

‘மோகத்தைக் கொன்றுவிடு-அல்லாலென் மூச்சை நிறுத்திவிடு!” ஏதாவது ஒரு விஷயம் தன் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம் என்று தோன்றிவிட்டால், அவன் இப்படித்தான் புலம்ப ஆரம்பித்துவிடுவது வழக்கம்; அவன் புலம்பும் போது அவனுடைய இதயமும் மேற்கண்ட பாடலைப் பாடி, அவனுடன் சேர்ந்து புலம்பும். இது அவனையும் அறியாமல் அவனுக்கென்றே அமைந்துவிட்ட வழி; அந்த வழிக்குக்