பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 காதலும்கல்யாணமும்

குறுக்கே சங்கர் என்றும் நிற்பதில்லையாதலால் அன்றும் நிற்கவில்லை!

ப்போதெல்லாம் யார் எங்கே, எந்தத் தவறு செய்தாலும் ஒரு புதிய சமாதானம் சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்; அதுதான் ‘அவனும் மனிதன் தானே, இவனும் மனிதன்தானே?’ என்பது. அதாவது, ‘மனிதன் என்றால் தவறு செய்யாமல் இருக்க முடியாது” என்பது அதன் உட்பொருள்

இருக்கலாம்; சில விஷயங்களில் அது உண்மையா யிருக்கலாம். ஆனால், எல்லா விஷயங்களிலும் அதுதான் உண்மை என்று ஆகிவிடக் கூடாதல்லவா?

அதைத்தான் அருணாவும் சொன்னாள்-'தப்பினோம், பிழைத்தோம் என்று ஒட்டலை விட்டு வெளியே வந்த சுந்தர், ‘'நானும் மனிதன்தானே?’ என்று சொல்லி, மறுபடியும் தன்னை ஏமாற்ற முயன்றபோது

“இப்படிச் சொல்ல வெட்கமாயில்லை, உங்களுக்கு? நீங்களும் மனிதர்தான் என்றால், இந்த உலகத்தில் நாகரிகம், கலாச்சாரம் என்றெல்லாம் பேசப்படுகிறதே, அதெல்லாம் அனாச்சாரமாக அல்லவா ஆகிவிடும்?’ என்றாள் அவள், ஆத்திரத்துடன்.

“எது அனாச்சாரம், எது கலாச்சாரம் என்று தெரியாமல் பேசுகிறாய், நீ அன்று தன் மேல் காதல் கொண்ட துஷ்யந்தன் தன்னை நெருங்கியபோது, எந்தவிதமானத் தடையும் சொல்லாமல் தன்னை அப்படியே அவனிடம் ஒப்படைத்து விட்டாளே ஒரு பெண். அதுதான் கலாச்சாரம்: இன்று உன்மேல் காதல் கொண்ட சுந்தர் உன்னை நெருங்கியபோது, மூன்றாவது மனிதன் ஒருவன் முண்டியடித்துக் கொண்டு வரும் வரை நீ அவனைப் படாத பாடுபடுத்தி வைத்தாயே, அதுதான் அனாச்சாரம்’ என்றான் அவன், அமைதியுடன்.