பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 9

‘ரொம்பச் சரி, ரொம்பச் சரி நான் மட்டும் என்னவாம்? என்னுடைய ‘ஸிஸர் கிராப் கூட சினிமா நடிகர்களைப் பார்த்து வைத்துக் கொண்டதுதானே?”

“ஆமாம், நீங்கள் ஏன் அரும்பு மீசைக்குப் பதிலாக அந்தப் பஞ்சாப்வாலா தாடி'யை வைத்துக் கொள்ள வில்லை?”

‘நமைக்கும் போது சொரிந்து விட ஆள் இல்லாமல் தான் இப்போதுதான் நீ வந்துவிட்டாயே, இனிமேல் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்!”

“ஐயோ வேண்டாம்! நான் சொரிய ஆரம்பித்தால் உங்களுக்கு அடிக்கடி நமைக்க ஆரம்பித்துவிடும்!’ என்று மறுபடியும் தன் வெள்ளி மணிச் சிரிப்பைக் கலகலவென்று உதிர்த்தாள், அவள்

அந்தச் சிரிப்பிலே சொக்காமல் சொக்கி, ‘அதை ஏன் சொல்கிறாய், போ! ஒரு முறை நான் அந்தத் தாடியை வைத்துக் கொண்டு பட்ட பாடு-இரண்டு கைகள் போதவில்லை. அதைச் சொரிய’ என்றான் அவன்.

‘அதற்காக என்னுடைய கைகளையும் சேர்த்து நாலு கைகளாக வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் முடியாது; அடிக்கடிக் கடித்துத் துப்ப இரண்டு கைகளில் உள்ள நகங்கள் போதாமல் ஏற்கெனவே நான் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேனாக்கும்?’ என்றாள் அவள்.

‘சரி வேண்டாம் அந்தத் தொல்லை பிடித்த தாடி! வெளியே போவோமா?’ என்றான், அவன்.

‘நான் தயார்” என்றாள் அவள். ‘இதோ நானும் தயார்’ என்று இரண்டே நிமிஷத்தில் அவனும் தயாராக, இருவரும் டக்டக், டக்டக் என்று தாள லயம் தவறாமல் நடந்து வெளியே வந்தனர்.

வாசலில் தயாராயிருந்த ஸ்கூட்டரை வழக்கம் போல் அவன் வந்து எடுத்தானோ இல்லையோ, ‘என்னைப்