பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 காதலும் கல்யாணமும்

கொண்டிருந்த மீனாட்சியம்மாள் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

அவளைக் கண்டதும் அவசர அவசரமாகத் தன் கண்ணிரைத் துடைத்துக் கொண்டு, ‘நானா, அழுகிறேனா? இல்லையே’ என்று சிரித்தாள் அருணா.

“தேவலையே? இந்த வயதிலேயே அழுவதற்கும், அதே சமயத்தில் சிரிப்பதற்கும் கற்றுக்கொண்டு இருக்கிறாயே, நீ” “ஆமாம், நேற்று வரை எனக்குச் சிரிப்பதற்கு மட்டுந் தான் தெரிந்திருந்தது; இன்று அழவும் தெரிந்துவிட்டது’

“யாரால் தெரிந்தது, அது?” “யாராலா, யாராலா? என் அம்மாவால்தான் தெரிந்தது, அது’

அவள் சொன்ன தோரணையிலிருந்தே அது பொய் என்று ஊகித்துக் கொண்ட மீனாட்சியம்மாள், அதற்கு மேல் அவளைச் சோதனைக்கு உள்ளாக்க விரும்பாமல், ‘போகட்டும்; ஆனால் ஒன்றை மட்டும் நீ எப்போதும் உன்னுடைய நினைவில் வைத்துக் கொள்-இந்த உலகத்தில் நீ சிரிக்கும்போது உன்னுடன் சேர்ந்து சிரிக்க எத்தனை பேர் வேண்டுமானாலும் தயாராயிருப்பார்கள்; அழும்போது உன்னுடன் சேர்ந்து அழ ஒருவரும் தயாராயிருக்க மாட்டார்கள் என்பதுதான் அது’ என்று சொல்லி, அவளை லேசாகத் தட்டிக் கொடுத்துவிட்டு மேலே சென்றாள்.

‘எவ்வளவு பெரிய உண்மை அதை எப்பேர்ப்பட்ட சமயத்தில் அவர்கள் எனக்கு நினைவூட்டிவிட்டுச் செல்கிறார்கள்!’ என்று வியந்த அருணா, வைத்த விழி வாங்காமல் அவளையேப் பார்த்துக்கொண்டு நின்றாள்

அப்போது, ‘அன்று மாலை வரை எங்கேயாவது பொழுதை ஒட்டவேண்டுமே என்ற கவலை அருணாவின் உள்ளத்தில் எழுந்தது.அதற்கும் மீனாட்சி அம்மாளின் வீட்டையே தஞ்சமடைந்தால் என்ன?