பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 காதலும்கல்யாணமும்

பேசாமல் ஏதாவது ஒரு பகல் காட்சிக்குப் போய்... ...அங்கே படமாத் தெரியப் போகிறது, தனக்கு? வேறு என்னென்னவோ அல்லவா தெரியும்?-எது தெரிந்தால் என்ன?-தனக்குப் படமா முக்கியம், பொழுது போவதல்லவா முக்கியம்?

பையில் சில்லறை இருக்கிறதா என்று பார்த்தாள்; இருந்தது-“சரி” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அவள் பஸ் ஏறப் போனபோது ‘நில்’ என்று யாரோ தன்னை அதட்டும் குரல் கேட்டுத் திரும்பினாள்-மணி. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அவள் எந்த மணியைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினாளோ, அந்த மணி

“என்ன அண்ணா?'அவள் குரல் தழுதழுத்தது. ‘இன்னொரு முறை கூப்பிடாதே, என்னை அண்ணா என்று'அவன் குரலில் இடிஇடித்தது.

‘இல்லை, கூப்பிடவில்லை’ ‘உன்னுடன் பேசக்கூட எனக்கு விருப்பமில்லைதான்; ஆனாலும் பேசுகிறேன்-என்னைக் கண்டு நீ வீணாக மிரண்டுக் கொண்டு இருக்கக் கூடாதே என்பதற்காக’

‘இப்படிப் பேசி என்னை வதைப்பதைக் காட்டிலும் நீங்கள் என்னை அடித்தே வதைக்கலாமே, அண்ணா!’

‘மூடு வாயை, உன்னை அடிக்கும் அளவுக்கு நான் இன்னும் மிருகமாகிவிடவில்லை-போ, தைரியமாகப் போ உன் அண்ணன் உன்னைப் பற்றி, உன்னுடைய நடத்தையைப் பற்றி, யாரிடமும் எதுவும் மறந்துக் கூடச் சொல்லமாட்டான் என்ற நம்பிக்கையுடன் போ, போ தைரியமாகப் போ!’

‘இதைச் சொல்லத்தான் நீங்கள் இவ்வளவு தூரம் வந்தீர்களா, அண்ணா?”

“ஆமாம்; உன்னுடைய பயத்தைக் கொண்டே உன்னைச் சித்திரவதை செய்ய நான் விரும்பவில்லை-அதற்காகத்தான் வந்தேன்; நீ போகலாம்'