பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 113

அவன் திரும்பினான்; அவனுக்குத் தெரியாமல் அவன் பாதம் பட்ட இடத்தைத் தொட்டுத் தன் கண்ணில் ஒற்றிக் கொண்டு அவள் கிளம்பினாள்:

அன்று என்னமோ, தெரியவில்லை-சினிமாக் கொட்டகையிலாவது அருணாவுக்குச் சோதனையில்லாம லிருந்ததா என்றால், அதுவும் இல்லை. காரணம், அவளுக்கு முன்னாலேயே மோகனும், பாமாவும் அங்கே உட்கார்ந்திருந்ததுதான்

17. அறிமுகம்

LDனிதன் குற்றம் செய்யாதவரை, அப்படியே செய்தாலும் அது பிறருக்குத் தெரியாதவரை, யாரைக் கண்டும் அவன் பயப்படுவதில்லை. செய்து விட்டாலோ, செய்த குற்றம் பிறருக்குத் தெரிந்து விட்டாலோ, மற்றவரைக் கண்டு மட்டும் அவன் பயப்படுவதில்லை; தன்னைக் தானே கண்டும் பயப்படுகிறான். ஏன், தன்னுடைய நிழலைக் கண்டும் பயப்படுகிறான்1-அந்த நிலையிலேதான் அன்று இருந்தாள், அருணா.

ஆகவே, தனக்கு முன்னால் மோகனும், பாமாவும் அங்கே வந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டதும், அவள் முதலில் எழுந்து போய்விடலாமா என்று நினைத்தாள்ஆனால் எங்கே போவது? அதுதான் தெரியவில்லை, அவளுக்கு.

டிக்கெட்டை மாற்றிக்கொண்டு மேல் வகுப்புக்குப் போய் விடலாம் என்றாலோ, அவள் வந்திருந்த மேல் வகுப்புக்கு மேல் அந்தத் தியேட்டரில் வேறு எந்த மேல் வகுப்பும் இல்லை!

கீழ் வகுப்புக்கு வேண்டுமானால் போய்விடலாம். அதற்காக இப்போதுள்ள டிக்கெட்டை மாற்றிக்கொள்ள

கா.க -8