பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 காதலும் கல்யாணமும்

முடியாதென்றாலும், வேறு டிக்கெட்டை வேண்டுமானாலும் வாங்கிக் கொண்டு விடலாம். ஆனால், கீழ் வரிசைக்குப் போகும்போது மேல் வரிசையில் உள்ளவர்கள் தன்னைப் பார்த்துவிட்டால்?- அதனாலென்ன, விளக்கை அணைத்த பிறகு போய் உட்கார்ந்து கொண்டுவிட்டால் போகிறது

இது என்ன பைத்தியக்காரத்தனம்1-அணைக்கப்பட்ட விளக்குகள் எப்போதும் அணைக்கப்பட்ட விளக்குகளாகவே இருந்துவிடுமா, என்ன மறுபடியும் அவை ஏற்றப் படாதா?-அப்போது நான் எங்கே போவேன்? அப்போது நான் இவர்களுடைய பார்வையிலிருந்து எப்படித் தப்புவேன்?

நல்ல வேடிக்கை இது!-நேற்றுவரை வாழ்க்கையில் வெளிச்சத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தவள் நான்; இன்றோ இருட்டை எதிர்பார்க்கிறேன்

ஆம்; திருடனுக்குப் பிடிக்காத வெளிச்சம், எனக்கும் பிடிக்கவில்லை இப்போது

வேண்டும்; நன்றாக வேண்டும்-பெற்றோர் செலவில் பெற்ற புத்திசாலித்தனத்தை வைத்துக்கொண்டு, பெற்றோரையே முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு விட்டவள் அல்லவா, நான்?-வேண்டும்; நன்றாக வேண்டும்! அந்தச் சண்டாளனுக்காக அவர்களிடம் நான் சொன்னதென்னமோ ஒரே ஒரு பொய்தான் அந்த ஒரே ஒரு பொய்யை மெய்யாக்குவதற்காக இப்போது நான் எத்தனை பொய்கள் சொல்லவேண்டியிருக்கிறது? என்ன பாடு படவேண்டியிருக்கிறது?

அந்தப் பொய்யைக் கூட நானா சொன்னேன், அவர்களிடம் - இல்லை; அவன் சொன்னதை நான் அப்படியே சொல்லிவிட்டேன் அவர்களிடம்1-உண்மையில் எனக்கும் தெரியாதே, அன்று அவன் சொன்னது பொய் என்று? சொன்னது பொய்யாயிருந்தாலும், அதை எவ்வளவு அழகாகச் சொன்னான், அவன் ‘கடவுளுக்கு, உருவம் கொடுத்தவன் சிற்பி, காதலுக்கு உருவம் கொடுத்தவன்