பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 காதலும்கல்யாணமும்

பார்த்து விட்டு வந்திருந்தால் இவன் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு நேராக மேலே அல்லவா வந்திருக்க வேண்டும்? இங்கே நின்று வாசலைப் பார்த்துக்கொண்டு இருக்கக் காரணம்?

நண்பர்கள் யாரையாவது எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறானோ? அப்படியிருந்தால், இவன் இங்கே எவ்வளவு நேரம் நின்றுகொண்டு இருப்பானோ? அதுவரை நான் எங்கே நிற்பது?

இது என்னத் தொல்லை. அந்தப் பக்கம் போனால் அண்ணன்; இந்தப் பக்கம் வந்தால் இவன்-வேறு எந்தப் பக்கம் போவேன், நான்?

இந்தத் தியேட்டருக்கே ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, வேறு தியேட்டருக்குப் போய்விடலாமென்றாலும் இப்போது முடியாது போலிருக்கிறதே?

‘சரி, நடப்பது நடக்கட்டும் என்ற தீர்மானத்துடன் தான் ஏற்கெனவே உட்கார்ந்திருந்த இடத்துக்கே போய் உட்கார்ந்து விடுவது என்று நினைத்து அவள் திரும்பியபோது, மோகனும் பாமாவும் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே வெளியே வருவதுத் தெரிந்தது.

இது என்னக் கூத்து? இவர்கள் ஏன் இப்போது வெளியே வருகிறார்கள்?-இவர்களைக் கண்டு நான்தான் பயப்பட்டேன் என்றால், இவர்களும் அல்லவா என்னைக் கண்டு பயப்படுகிறார்கள்போல் இருக்கிறது

அதோ, அவன் அவளை அந்த ஐஸ்-கிரீம் கடைக்குப் பின்னால் அழைத்துக் கொண்டு போய் ஏதோ சொல்கிறான் போல் இருக்கிறதே-என்ன சொல்கிறான்)

‘நீ இங்கேயே நின்று கொண்டிரு; நான் போய வேறு வகுப்புக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்து விடுகிறேன். அவளுடன் உட்கார்ந்து நம்மால் நிம்மதியாகப் படம் பார்க்கவும் முடியாது; பேசவும் முடியாது!'