பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 125

சந்திப்போம்!’ என்றாள், அவளை அங்கிருந்து சீக்கிரம் அனுப்பிவைக்கும் நோக்கத்துடன்

‘நன்றி; நான் என்னமோ ஏதோ என்று பயந்து விட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே அவள் ஏற்கெனவே உட்கார்ந்திருந்த இடத்துக்குத் திரும்பியதும், ‘இப்போது நீ போகலாம்’ என்றான் மணி, கந்தரின் கையை விட்டு-ஆம், அருணாவுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்த பிறகு அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டிருக்க அவன் விரும்பவில்லை!

இதை ஒருவாறுப் புரிந்துகொண்ட சுந்தர், அப்பாடா என்று திரும்பியபோது, இடைவேளை மணி மறுபடியும் கிணுகினுத்தது. அதைத் தொடர்ந்து தியேட்டரின் விளக்குகள் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக அணையவில்லை; சுந்தரின் ஆசை விளக்கும் அணைந்தது.அணையாதா, பாழாய்ப்போன மணி அதுவரை தன்னைப் படுத்தி வைத்த பாடு போதாதென்று தனக்குப் பக்கத்தில் வேறு வந்து உட்கார்ந்துவிட்டால்?

ஒரு வினாடி, இரண்டு வினாடி, மூன்று வினாடி, நான்கு வினாடி என்று ஐந்து வினாடிகளும் ஆயின. சுந்தர் படத்தைப் பார்ப்பதாகத்தான் தெரிந்ததே தவிர, தன்னைப் பார்ப்பதாகத் தெரியவில்லை, ரூபாவுக்கு

இது என்ன அதிசயம் விளக்கை அனைத்து ஐந்து வினாடிகள் ஆனபிறகும் இவரா இப்படி உட்கார்ந்தி ருக்கிறார்? நம்ப முடியவில்லையே, தன்னால்?

இடைவேளைக்கு முன்னால் இருட்டைத் துணையாகக் கொண்டு இவருடைய விரல்கள் தன்னைப் படுத்திய பாடுt-எங்கெல்லாமோ தொட்டுத் தடவி, உரசி. நெருடி...

ஒரு கணம் தன்னை மறந்து அந்த இன்பக் கிளுகிளுப்பைக் கண்ணை மூடி அனுபவித்துப் பார்த்தாள் அவள்; மறுகணம் என்ன இருந்தாலும் தான் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவள் என்பதை எந்த நிலையிலும் மறந்து