பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 காதலும் கல்யாணமும்

விடக் கூடாது என்பதற்காக, “சீச்சீ ஆபாசம், ஆபாசம்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு சுந்தரைப் பார்த்தாள். அப்போது குறும்பு செய்த அவனுடைய கைவிரல்கள் இப்போது ஏன் செய்யவில்லை என்றுதான்

ஆனால் அவனோ அவள் நினைத்ததுபோல் படத்தைக் கூடப் பார்க்கவில்லை; படத்தைப் பார்ப்பது போல் பக்கத்தில் இருந்த மணியைப் பார்த்துக் கொண்டிருந்தான்

இந்த சினிமா முடிந்த பிறகாவது இவன் தன்னை விடுவானா?- எங்கே விடப் போகிறான், இவன் தொடர்வதைப் பார்த்தால் ஏழேழு பிறவிக்கும் அல்லவா தன்னைத் தொடர்ந்து கொண்டே இருப்பான் போலிருக்கிறது! அதிலும், இன்று அருணா தன் வீட்டுக்குப் போய்ச் சேரும் வரை இவன் தன்னை விடப்போவதில்லை. அத்துடன், ரூபா வேறு சேர்ந்துகொண்டு விட்டாள், இப்போது கேட்க வேண்டுமா, இவர்கள் இருவருடைய கற்பையும் காப்பதாக நினைத்துக்கொண்டு இவன் தனக்கு வேண்டாதத் தொந்தரவையெல்லாம் கொடுத்துக்கொண்டே இருக்கப் போகிறான்!-பைத்தியக்காரன், இப்படி எத்தனை நாட்கள் இவர்களுடைய கற்பை இவனால் காப்பாற்றிக் கொண்டு இருக்க முடியும்?

உலகம் வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டே இருக்கிறது; வளர்ந்து வரும் நாகரிகத்துக்கு முன்னால் பழைய சட்ட திட்டங்களெல்லாம் தவிடு பொடியாகிக்கொண்டு வருகின்றன. நேற்று ஒருத்தி ஒருவனை சாகும்வரை பிரிய முடியாது சட்ட ரீதியாக, இன்று நினைத்தால் பிரிந்து விடலாம்-பிரிந்தவள், இன்னொருவனைத் திருமணமும் செய்துகொண்டு விடலாம்; செய்துகொண்டும் விடுகி றார்கள்-அப்போது எங்கே போகிறது, கற்பு?

ஒருத்தி ஒருவனிடம் இருக்கும்போது வேண்டுமானால், தன் கற்பை இன்னொருவனிடம் இழக்காமல் இருக்கட்டும், அவ்வாறு இழப்பது குற்றமாகவோ, துரோகமாகவோ