பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 11

என்பதைக் தெரிந்துகொண்ட மோகன், “என்ன துரதிர்ஷ்டம், போடா!’ என்று சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான், அடுத்த குத்துக்குத் தன் முதுகை அவனிடம் காட்ட விரும்பாமல்

‘சரி, துரதிர்ஷ்டத்துக்குப் பின்னால் ஏதோ ஒரு கதை இருக்கிறது’ என்பதை ஊகித்துக் கொண்ட மணி, ‘கதையைச் சொல்லு?’ என்றான், பேச்சை வளர்த்த விரும்பாமல்.

‘ஓர் இனிய கனவு!’ என்று ஆரம்பித்தான். மோகன்.

‘பகலிலா?’ என்று கேட்டான், மணி.

“ஆமாம்.’

‘பலிக்காது!”

“என்னடா, எடுக்கும்போதே இப்படிச் சொல்கிறாயே?”

‘இனிய கனவு என்றால் அதை இரவில் கண்டிருக்க வேண்டும்; பகலில் கண்டிருக்கிறாயே, நீ”

‘போடா, போ கனவைக் கூட விரும்பும்போது காண முடியுமா, என்ன?”

“சரி, சொல்லு?”

“என் லட்சிய மனைவி'யைப் பற்றித்தான் ஏற்கெனவே நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேனே, அவள் இன்று என்னுடைய கனவிலே வந்தாள்!”

‘வந்து...’

‘தன் வெள்ளிமணிச் சிரிப்பாலே என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாள்.’

‘கொண்டு...’

‘ஸ்கூட்டருக்குப் பின்னால் நீங்கள் உட்காருங்கள்; நான் முன்னால் உட்கார்ந்து ஒட்டுகிறேன் என்றாள்!”

‘அடி சக்கை எப்படி உட்கார்ந்தால் என்ன, ஹlட்டர்’ ஹீட்டர்தானே என்று அவள் நினைத்துவிட்டாள் போலிருக்கிறது"