பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 காதலும் கல்யாணமும்

இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் இருப்பார்கள்; ருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவிக்கொண்டுதான் இருக்கும்; சூடு காணும் வரை அடுப்பில் காயும் பாலைக்கூட அது நக்கி நக்கிக் குடிக்க முயன்று கொண்டுதான் இருக்கும்

இந்த விஷயத்தில் சாஸ்திர சம்பிரதாயங்கள் மட்டுமல்ல; தார்மீக ஆன்மீகத் தத்துவங்கள் மட்டுமல்ல; தீராத வியாதி வெக்கைகள் மட்டுமல்ல; சட்டம், நீதிமன்றம், சிறைச்சாலை ஆகியவையெல்லாம் கூட அன்றும் தோல்வியையேக் கண்டன; இன்றும் தோல்வியையேக் கண்டு வருகின்றன.

எத்தனையோ அவதார புருஷர்கள் இந்த நாட்டிலே தோன்றினார்கள்; மறைந்தார்கள். எத்தனையோ உபதேசங்கள் அவர்களால் செய்யப்பட்டன; சொல்லப்பட்டன. ஆனால், மனிதன் தனக்குத் தானே தேடிக் கொள்ளும் தீமைகள் மட்டும் அன்றும் மறையவில்லை; இன்றும் மறையவில்லை! . இவற்றையெல்லாம் பார்க்கும்போது தான் ஒன்றுமே இல்லைதான்.ஆனால் கண்ணிருந்தும் பாராமல் காதிருந்தும் கேளாமல், கையிருந்தும் செயல்படாமல் செத்த பிணம் வேண்டுமானால் இருக்கலாம்; உயிருள்ள மனிதன், உணர்ச்சியுள்ள மனிதன் அப்படி இருக்க முடியாது அல்லவா? அப்படி இருக்கக்கூடாது அல்லவா?அதனால்தான் இவர்களுடைய விஷயத்தில் தான் தலையிட நேர்ந்தது; தன்னால் முடிந்ததையும் செய்ய நேர்ந்தது. இனி, தான் போய்விடலாம்; இந்தச் சுந்தரைத் தவிர மற்றவர்கள் தன்னைப் பார்ப்பதற்கு முன்னாலேயே தான் போய் விடலாம்...

இந்த முடிவுடன் மணி எழுந்தபோது, “படம் இன்னும் முடியவில்லை; உட்கார்!” என்று தன்னை யாரோ பழிக்குப் பழி வாங்குவதை அவன் உணர்ந்தான். ஒருவேளை சுந்தராயிருக்குமோ என்ற அதிசயத்துடன் மணி, தன்னை