பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 131

அந்த உணர்வுக்கு உள்ளாக்கியவனைத் திரும்பிப் பார்த்தபோது, அவன் சுந்தராயில்லை; மோகனாயிருந்தான்!

‘நீ வேறு பார்த்துவிட்டாயா, என்னை?’ என்றான் மணி, மறுபடியும் உட்கார்ந்துகொண்டே.

‘ஏன், பார்க்கக்கூடாதா?’ என்றான் மோகன். ‘அதற்குச் சொல்லவில்லை...’ ‘பின் எதற்குச் சொல்கிறாய்? சினிமா பாவத்தின் பிறப்பிடம் என்று இத்தனை நாட்களாகச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு, இன்று நீ யாருக்கும் தெரியாமல் இங்கே வந்திருக்கிறாயே, அதற்குச் சொல்கிறாயா?”

‘இது நான் எதிர்பார்த்ததுதான்’ “இருக்கலாம்; ஆனால், நான் எதிர்பார்க்கவில்லை’ அதற்குமேல் அதை விவரிப்பது அருணாவை அவனுக்குக் காட்டிக் கொடுப்பதில்தான் போய் முடியும் என்று அஞ்சிய மணி, ‘அது சரி, நீ ஏன் அவர்களை அங்கே விட்டுவிட்டு இங்கே வந்துவிட்டாய் ‘ என்று பேச்சை மாற்றினான்.

‘அவர்கள் இருவரும் பேசுவதற்கு இதுவரை தடையாயிருந்தது போதும் என்று எண்ணித்தான் வந்தேன்’ என்றான் மோகன்.

அதற்குள் ‘ஸ்ஸ்’ என்று பின்னால் இருந்த ரசிகர்கள் இரையவே, இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டுத் திரையைப் பார்த்தார்கள்; காதலியை அடைய முடியாத காதலன் கண்ணில் நீருடன், அடிவானத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருந்தான்

‘அழவேண்டியதுதான், வாழ்க்கையில் அதைத் தவிர அடைவதற்கு வேறு என்ன இருக்கிறது?’ என்றான் மணி, வெறுப்புடன்.

அவன் சொன்னதைப் பொருட்படுத்தாமல், ‘ச்சூச்சூ!’ என்று தங்கள் அனுதாபத்தைக் கதாநாயகனுக்குத்