பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 காதலும் கல்யாணமும்

தன் தங்கையிடம் நம்பிக்கை இல்லையென்றால், உனக்குமா அதனிடம் நம்பிக்கையில்லை?” என்று மணி கேட்டான்.

“என்னைப் பொறுத்தவரை எனக்கு அந்தக் கவலையே இல்லை; இவர் விரும்பினால் இப்போதே வேண்டு மானாலும் நான் இவருடன் இவருடைய வீட்டுக்கு வரத் தயார்’ என்றாள் பாமா, மேலும் கொஞ்சம் துணிந்து.

‘ஐயோ, வேண்டாம் சினிமாக்களில் வரும் அப்பாக்களைப் போல் என் அப்பாவும் துப்பாக்கியை எடுத்து என்னிடம் கொடுத்து, முதலில் என்னைச் சுடு; அப்புறம் பாமாவைக் கல்யாணம் செய்துக்கொள்’ என்று சொன்னாலும் சொல்வார்’ என்று அலறினான் மோகன்.

அருணா சிரித்தாள்; சிரித்துவிட்டுச் சொன்னாள்: ‘பயப்படாதே அண்ணா, அப்பாவிடம் இப்போது துப்பாக்கி இல்லை’

‘இல்லாவிட்டால் என்ன, வேண்டுமென்று தோன்றும் போது அது அவருக்குக் கிடைக்கும்’

‘அதற்காக?” “என்னைப்பற்றி நீ என்ன வேண்டுமானாலும் அவரிடம் சொல்லு: பாமாவைப்பற்றி மட்டும் ஒன்றும் சொல்லி விடாதே என்கிறேன்’

‘இவ்வளவுதானே? நிச்சயமாகச் சொல்லமாட்டேன்; நீ தைரியமாகப் போய் வா!’

அருணா திரும்பினாள்; மோகன் கால்சட்டைப் பைக்குள் கையை விட்டுக்கொண்டே கேட்டான்:

‘அதற்காக ஏதாவது...’ மணிக்கு ஒன்றும் புரியவில்லை; ‘'என்ன ஏதாவது?” என்று குறுக்கிட்டான்.

‘லஞ்சம்’ என்றான் மோகன், சிரித்துக் கொண்டே

‘அதுகூடக் கொடுப்பதுண்டா, நீ?"