பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 காதலும் கல்யாணமும்

போல் அவனும் கண்ணில் ஒற்றிக்கொண்டா பத்திரப்படுத்தி வைத்திருக்கப்போகிறான்?

இருக்காது; வந்த அன்றைக்கே படித்துப் பார்த்துவிட்டு அவன் அவற்றைக் கிழித்து எறிந்துவிட்டிருப்பான்

தான் மட்டும் அவற்றை இனிப் பத்திரப்படுத்தி வைத்து என்ன பிரயோசனம்?-வீட்டுக்குப் போனதும் அம்மாவுக்குத் தெரியாமல் அவற்றை எடுத்து அக்கினி பகவானுக்கு இரையாக்கிவிட வேண்டும். சுந்தரி என்ற பெயருடன் அவன் வாங்கிக் கொடுத்த பேனா ஒன்று வீட்டில் இருக்கிறது; அதையும் தூக்கித் துர எறிந்துவிட வேண்டும்!

ஆனால் அவனுடைய நினைவுகள் பல தன் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கின்றனவே, அவற்றைத் தூக்கித் தூர எறிந்தால்தான் உண்டு; இல்லாவிட்டால் அது தன்னை உறுத்திக்கொண்டேதான் இருக்கும்1-இருக்கட்டுமே, தான் செய்தத் தவற்றுக்கு அந்தத் தண்டனையைக் கூடவா அனுபவிக்கக் கூடாது?

எல்லா மடத்தனங்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் தான் செய்த இன்னொரு மடத்தனம், கவிஞர் தாகூர் எழுதிய ‘காதலர் பரிசு’ என்ற புத்தகத்தை வாங்கி அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது.அப்படித்தான் கொடுத்தேனே, சும்மாவாவது கொடுத்தேனா? அதுவும் இல்லை; அப்போதிருந்த நிலையில் ஏதோ ‘கன்னாபின்னா’ என்று எழுதிக் கையெழுத்து வேறு போட்டுக் கொடுத்திருக்கிறேன்! அவன் அதைப் படித்தா இருக்கப் போகிறான் ரசித்தா இருக்கப் போகிறான். -ஊஹாம்; அந்த மாதிரி ரசனையெல்லாம் அவனுக்கு இருந்தால், இந்த மாதிரி ஈனத்தனங்களில் எல்லாம் அவன் ஏன் ஈடுபடப் போகிறான்? ஆனால் ஒன்று-படித்தாலும் படிக்காவிட்டாலும், ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும், அந்தப் புத்தகத்தை மட்டும் அவன் பத்திரப்படுத்தி வைத்திருப்பான்-எதற்கு, தன்னுடைய நினைவுக்காகவா? அப்படியொன்றும் இருக்காது; தன்னைப்