பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 காதலும்கல்யாணமும்

‘நீங்கள் வந்து இப்படி உட்கார்ந்துகொள்ளுங்களேன், அப்பா’ என்றாள் அருணா, டிரைவருக்குப் பக்கத்தில் முன் nட்"டில் உட்கார்ந்திருந்த ஆபத்சகாயத்தை நோக்கி.

“சும்மா உட்கார் அம்மா, அவர் உனக்கு அப்பா மாதிரி’ என்றார் அவர்.

அருணா, தயக்கத்துடன் உட்கார்ந்து கதவைச் சாத்த, ‘நீ போப்பா!’ என்றார் ஆபத்சகாயம், டிரைவரை நோக்கி.

அதற்குமேல் ஆபத்சகாயத்திடம் பேச விரும்பாமல், ‘எப்படியிருந்தது மகாபலிபுரம்?’ என்று அவருடைய பெண்ணுடன் பேச ஆரம்பித்துவிட்டார், சுகானந்தம்!

அப்போது அவர் தன்னைப் பார்த்த பார்வை அப்பா பார்க்கும் பார்வை மாதிரி இல்லாமல் இருக்கவே, “எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருந்தது’ என்றாள் அவள், நறுக்குத் தெறித்தாற்போல

‘'தேவலையே, ரத்தினச் சுருக்கமாகப் பேசுகிறாளே!’ என்றார் அவர், அவளை மேலும் ஆழம் பார்க்கும் நோக்கத்துடன் அவள் முதுகை லேசாகத் தடவி.

அருணா அதற்கு இடம் கொடாமல் நெளிந்து, ‘இதென்னப்பா இது இன்னும் நான் குழந்தையா என்ன, இவர் என் முதுகில் தடவிக் கொடுக்க?’ என்றாள் எரிச்சலுடன்.

‘எனக்கு நீ குழந்தையென்றால், அவருக்கும் குழந்தைதான்’ என்றார் அந்த அசட்டு அப்பா.

அவர் சொன்னது பிடிக்கவில்லை அவளுக்கு, ‘அது என்ன இழவோ’ என்று தனக்குள் முணுமுணுத்தவாறே கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தாள்.

‘கல்லூரியில் படிக்கிற பெண்ணா, லட்சணமா யில்லையே? கலகலப்பாகப் பேசிப் பழகக்கூடத் தெரிய வில்லையே, இவளுக்கு’ என்றார் சுகானந்தம், அவளைத் தன் கடைக்கண்ணால் கணித்துக்கொண்டே.