பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 143

‘வித்தியாசமாக நினைக்காதீர்கள்! இவள் அம்மா கொஞ்சம் கர்நாடகம்; அதனால் இவளும் கொஞ்சம் கர்நாடகமாயிருக்கிறாள்!’ என்று அவருக்குச் சமாதானம் சொன்னார் ஆபத்சகாயம்.

‘ஒஹோ இவளுக்கு எப்போதுக் கல்யாணம் செய்வதாக உத்தேசம்?”

‘இந்த வருடத்தில் செய்துவிடலாமென்று இருக்கிறேன்!”

‘மாப்பிள்ளை’

“இனிமேல்தான் தேடவேண்டும்!” சுகானந்தம் சிரித்தார்; சிரித்துக்கொண்டே கேட்டார்: ‘எனக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விடுகிறீரா இவளை’

ஆபத்சகாயம் திரும்பி, ‘இன்னும் எத்தனை கல்யாணங்கள்தான் செய்துகொள்ளப் போகிறீர்கள் ஐயா, நீங்கள்?’ என்று கேட்டார், தானும் அவருடன் சேர்ந்து சிரித்துக் கொண்டே.

‘அதற்கும் தான் கட்டுப்பாடு விதித்துவிட்டார்களே, நமது சுதந்திர சர்க்கார்’ என்றார் அவர்.

‘அதனாலென்ன, அதற்காக நீங்கள் ஏகபத்தினி விரதம் இருப்பதாகத் தெரியவில்லையே, எனக்கு’

சுகானந்தம் மறுபடியும் சிரித்தார்; சிரித்துக்கொண்டே சொன்னார்:

‘ஏதோ என்னாலானத் தொண்டு; பெண்ணைப் பெற்றவர்களின் துயரை அந்த வகையிலாவதுத் துடைக்கிறேனே”

‘பொல்லாத ஆளய்யா, நீங்கள் அதையும் ஒருத் தொண்டாகவா எடுத்துக்கொண்டுவிட்டீர்கள்?’ என்றார், ஆபத்சகாயமும் அவருடன் சேர்ந்து மறுபடியும் சிரித்துக்கொண்டே