பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 காதலும் கல்யானமும்

அந்தப் பெரிய மனிதர்களின் சிரிப்பையும், சிருங்காரரசத்தில் அவர்களுக்கு இருந்த லயிப்பையும் அருணாவால் தாங்க முடியவில்லை; ‘அப்பா வண்டியைக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லி என்னை இறக்கிக் கீழே விட்டுவிடுங்களேன்; நான் பேசாமல் பஸ்ஸிலேயே வீட்டுக்குப் போய்விடுகிறேன்!” என்றாள் அவசர அவசரமாக,

அவள் எவ்வளக்கெவ்வளவு அவசரப்பட்டாளோ, அவ்வளவுக்கவ்வளவு அமைதியாக, ‘அவசரப்படாதே, அம்மா, ஐயாவைக் கொண்டு போய் அவருடைய வீட்டில் விட்டுவிட்டுப் போனால் போச்சு’ என்றார் அவர்.

அப்போது, ‘ஐயாவின் வீடு எங்கே இருக்கிறது? அதைச் சொல்லவில்லையே. எனக்கு’ என்றான் டிரைவர்.

“அவருக்கு எத்தனையோ வீடுகள் எந்த வீட்டுக்குப் போகிறாரோ, என்னமோ, ஏன் சுவாமி, எங்கே போகவேண்டும் நீங்கள்?”

“கீழ்ப்பாக்கத்திலுள்ள கீதாவின் வீட்டுக்கு’ அவ்வளவுதான், கார் கீழ்ப்பாக்கத்தை நோக்கித் திரும்பியது.

அங்கே... வந்தது காராக இல்லாமல் டாக்சியாயிருக்கவே, “கோன் ஹை?’ என்றான் கூர்க்கா, அதை நிறுத்தி.

‘துமாரா ஸாப், அந்தர் தேக்கோ’ என்றார் ஆபத்சகாயம், தனக்குத் தெரிந்த இந்தியில்.

“மேரா ஸாப்’ என்று வியப்புடன் சொல்லிக்கொண்டே அவன் குனிந்துப் பார்த்துவிட்டு, ‘சலாம் ஸாப், அச்சா ஜாவ்!’ என்றான் கேட்டைத் திறந்து.

டாக்சி உள்ளே சென்றுப் ‘போர்டிகோவில் நின்றதுதான் தாமதம், உள் பக்கம் தாளிடப்பட்டிருந்த கதவை அவசர அவசரமாகத் திறந்துக் கொண்டு அரைக்கால்